தன் கணவருக்கு ராதிகாவுடன் திருமணம் என்று தெரிந்தும் பாக்யா பேசிய வசனம் நெட்டிசன்கள் மத்தியில் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.
மேலும், இந்த தொடரில் இவர்களுடன் ரேஷ்மா, விஷால், ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை இயக்குநர் டேவிட் இயக்கி வருகிறார். இந்த தொடர் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள எல்லா பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்:
பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை, சுயமரியாதை இருக்க வேண்டும் என்றும், பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதையும் பாக்கியா கதாபாத்திரம் உணர்த்துகிறது. அதிலும், கடந்த சில மாதங்களாகவே பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி வேற லெவலில் எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம், சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தான்.
சீரியலின் கதை:
சீரியலில் பாக்கியா கோபியிக்கு விவாகரத்து கொடுத்து விடுகிறார். கோபியின் மொத்த குடும்பமே பாக்கியாவை நிற்க வைத்து கேள்வி கேட்டது. இறுதியாக கோபி வீட்டை விட்டு வெளியே செல்கிறார். ஆனால், வீட்டில் உள்ள எல்லோரும் பாக்கியாவிடம் சண்டை போடுகிறார்கள். பின் கோபி ராதிகாவின் வீட்டிற்கு சென்று, என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள் என்று நாடகமாடுகிறார். பொய்யான காரணங்கள் சொல்லி ராதிகாவின் மனதை மாற்றி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைக்கிறார் கோபி. அதனை அடுத்து ராதிகாவின் வீட்டிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்கிறார்கள்.
கோபி-ராதிகா திருமணம்:
கோபி தன்னுடைய அம்மாவிடம் ராதிகாவை திருமணம் செய்ய போகும் தகவலை சொல்கிறார். இதனால் ஈஸ்வரி மனமடைந்து வீட்டில் தன்னுடைய கணவரிடம் புலம்புகிறார். எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கோபியின் அப்பா முடிவு எடுக்கிறார். இன்னொரு பக்கம், பாக்கியா தனக்கு கிடைத்த முதல் காண்ட்ராக்டில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து போராடுகிறார். தன் கணவருக்கு தான் இரண்டாம் திருமணம் நடைபெறுகிறது என்று தெரியாமல் அந்த மண்டபத்திலேயே பரபரப்பாக பாக்கியா சமைத்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் திருமணத்திற்காக கோபி- ராதிகா இருவரும் தயாராகி இருக்கிறார்கள்.
கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையா :
இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் திருமண மண்டபத்திற்கு கோபியின் தந்தை வந்து சண்டை போடுகிறார் இதனால் கோபியும் அவரிடம் சண்டை போட்டு அவரை பிடித்து தள்ளி விடுகிறார் பின்னர் பாக்கியா, கோபியின் தந்தையிடம் நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என்று அவரை சமையல் அறைக்குள் அழைத்துச் செல்கிறார். அங்கு பாக்யா, தன்னுடைய மாமனாரிடம் ‘நீங்கள் போங்க மாமா, எனக்கு இந்த வேலை மிகவும் முக்கியம். இதுதான் எனக்கு இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை. எதற்காகவும் என்னுடைய வேலையை விட முடியாது. இது என்னுடைய வேலை’ என்று வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரி என்பது போல டயலாக் பேசி இருக்கிறார். இந்த ப்ரோமோவைப் பார்த்து ரசிகர்கள் பலரும் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என்று கலாய்த்து வருகிறார்கள்