பாக்யா Vs ராதிகா : பரபரப்பாக நடந்த குடியிருப்பு தேர்தல், இறுதியில் வென்றது இவர் தான்

0
460
- Advertisement -

காலனியில் செயலாளர் பதிவுக்கான தேர்தலில் ராதிகாவை விட அதிக வாக்குகள் பெற்று பாக்கியா வெற்றி பெற்று இருக்கும் ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த தொடரில் இவர்களுடன் ரேஷ்மா, விஷால், ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

சீரியலில் பாக்கியா- கோபிக்கு விவாகரத்து ஆகி விடுகிறது. பின் கோபி அவர் ஆசைப்பட்ட மாதிரி ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபியின் மொத்த குடும்பமும் கோபி மீது கோபத்தில் இருக்கிறது. பின் இனியா வீட்டில் உள்ள எல்லோருடனும் சண்டை போட்டு கோபி வீட்டிற்கு சென்று விடுகிறார். கோபியின் அப்பா ராமமூர்த்தியும் கோபியின் வீட்டிற்க்கே வந்து தங்குகிறார். ராமமூர்த்தி, ராதிகாவிடம் மாட்டி கொண்டு கோபிப்படும் பாடு என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

சீரியலின் கதை:

தற்போது சீரியலில் பாக்யாவிற்கு சமையல் கேன்டீன் காண்ட்ராக்ட் கிடைக்கிறது. ஆனால், அதற்கு முன்பணமாக 7 லட்சம் கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். பணத்திற்காக பாக்யா வங்கி வங்கியாக சென்று கேட்கிறார். ஆனால், கணவருடைய முகவரியும், அவரும் வரணும் என்று சொன்னவுடன் பாக்கியா இந்த காண்ட்ராக்ட்டே வேண்டாம் என்று நினைக்கிறார். பின் இது குறித்து அவர் தனக்கு ஆடர் தந்த ஓனரிடம் சொல்லும் போது அவர் நான் உனக்கு உதவி செய்கிறேன்.

-விளம்பரம்-

காலனி தேர்தல்:

நீங்கள் சமையல் வேலையை தொடங்குங்கள் என்று அவருக்கு ஆறுதலாக பேசுகிறார். இன்னொரு பக்கம், வைதேகி நகர் பகுதி காலனியில் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. இதில் பாக்யாவை நிற்கவைக்க பலரும் சொல்கிறார்கள். பாக்யாவும் நிற்கிறார். கோபி ராதிகாவை நிற்க வைக்கிறார். இதனால் பாக்கியாவின் மொத்த குடும்பமும் பாக்கியாவிற்கு ஆதரவாக நிற்கிறது. கோபி ராதிகாவிற்கு ஆதரவாக இருக்கிறார். இந்த நிலையில் செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றவர் குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாக இருக்கிறது.

வெற்றி பெற்றவர்:

அதில் ராதிகா 112 வாக்குகள் வாங்கி இருக்கிறார். ஆனால், பாக்யா 1268 வாக்குகள் பெற்று வெற்றி பெறுகிறார். இதை கேட்டு கோபியும் ராதிகாவும் பேச முடியாமல் வாய் எடுத்து நிற்கிறார்கள். கோபி இதை ஏற்றுக்கொள்ள முடியாது மீண்டும் எண்ணுங்கள் என்று சொல்கிறார். ஆனால், தேர்தல் நடத்திய அதிகாரிகள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது பாக்கியலட்சுமி தான் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார் என்று சொல்கிறார். உடனே எழிலும் செழியனும் தன் அம்மாவை தூக்கிக்கொண்டு உற்சாகத்தில் கொண்டாடுகிறார்கள்.

Advertisement