இரண்டு கால்கள் உடைந்த நிலையில் நடனம் ஆடி டைட்டில் வெற்றி பெற்ற கயல் சீரியல் நடிகர். நிஜ வாழ்க்கையிலும் இவ்ளோ சோகமா ?

0
820
- Advertisement -

இரண்டு கால்களும் உடைந்த நிலையில் நடன நிகழ்ச்சியில் கயல் சீரியல் நடிகர் டைட்டில் வின்னர் ஆகியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அவினாஷ். இவர் கேரளாவை சேர்ந்தவர். ஆனால், தன்னுடைய நான்கு வயதிலேயே இவர் குடும்பத்துடன் சென்னைக்கு வந்து விட்டார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் ஸ்போர்ட்ஸ் பிளேயரும் ஆவார்.

-விளம்பரம்-

நேஷனல் லெவெலில் அத்தலடிக்சில் அவினாஷ் பல பதங்களை பெற்றிருக்கிறார். இருந்தாலும், இவருக்கு நடனத்தின் மீது தான் அதிக ஆர்வம். தன்னுடைய சிறு வயதில் இருந்து இவர் நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். நான்காம் வகுப்பு படிக்கும் போதே சன் டிவியில் ஒளிபரப்பான தில்லானா தில்லானா என்ற நிகழ்ச்சியில் இவர் பங்கு பெற்றிருந்தார். ஆனால், வீட்டில் படிப்பு தான் முக்கியம் என்று சொன்ன பிறகு இவர் 12 ஆம் வகுப்பு வரை படிப்பை முடித்துவிட்டு தான் தன்னுடைய டான்ஸ் கரியரை மீண்டும் தொடங்கியிருந்தார்.

- Advertisement -

அவினாஷ் குறித்த தகவல்:

இவர் சன் டிவியில் அழகு சீரியலில் திருநாவுக்கரசு என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி முடிவடைந்த அம்மன் சீரியலிலும் இவர் நடித்திருந்தார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கயலுக்கு தம்பியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தமிழ் மொழி சீரியலில் மட்டுமில்லாமல் பல மலையாள சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மேலும், சின்னத்திரை சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை அக்ஷயாவின் அண்ணன் ஆவார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ்:

அதுமட்டும் இல்லாமல் இவர் பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுகிறார். டான்ஸ் கேரளா டான்ஸ், லிட்டில் மாஸ்டர், டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0, ஓடி விளையாடு பாப்பா போன்ற பல நிகழ்ச்சியில் பங்கேற்றுகிறார். அந்த வகையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் அவினாஷ் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி தான் டான்ஸ் ஜோடி டான்ஸ்.

-விளம்பரம்-

நடன நிகழ்ச்சியில் அவினாஷ்:

இந்த நிகழ்ச்சி சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றும் நிகழ்ச்சி என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் சினேகா, பாபா பாஸ்கர் மாஸ்டர், சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி மக்கள் நிகழ்ச்சி நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அவினாஷ் பல சுற்றுகளில் சிறப்பாக நடனமாடி மக்கள் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். இந்த நிகழ்ச்சியின் கடைசி சுற்றில் இவருடைய இரண்டு காடுகளும் உடைந்து இருந்தது.

குவியும் வாழ்த்துக்கள்:

நடனம் ஆட முடியாத நிலையிலும் தன்னால் முடியும் என்று மன தைரியத்துடன் போராடி அவினாஷ் நடனமாடி டைட்டில் பட்டத்தையும் பெற்றிருந்தார். இந்த இடத்திற்கு வர பல வருடங்களாக இவர் போராடிக் கொண்டிருந்தார். இவருடைய விடாமுயற்சியில் டைட்டில் வின் பண்ணதை அடுத்து பலருமே வாழ்த்துக்களை குவித்து வருகின்றார்கள். மேலும், இவர் வெற்றி பெற்றதற்கு உறுதுணையாக இருந்தது அவருடைய காதல் மனைவிதான். இவர்கள் சிறு வயதில் இருந்தே காதலித்து வருகிறார்கள். பல போராட்டங்களுக்கு பின் தான் இவர்கள் திருமணம் நடந்தது. தற்போது பல போராட்டங்களுக்கு பிறகு அவினாஷ் கிடைத்த வெற்றிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement