தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் விஜய் ஆண்டனி. 2005 ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார். விஜய் ஆண்டனி அவர்கள் ஒரு இசையமைப்பாளராக மட்டும் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்து ஹீரோவாக நடிக்கலாம் என்று முடிவெடுத்தார். பின் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து இவர் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என பல படங்களில் நடித்தார். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்து வருகிறார் விஜய் ஆண்டனி. தற்போது விஜய் ஆண்டனி சாலி கிராமத்தில் உள்ள விஜய்யின் பழைய வீட்டில் தான் வசித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய்யின் வீட்டை விஜய் ஆண்டனி வாங்கியதாக செய்திகள் வெளியானது.
இதையும் பாருங்க : நான் அந்த பார்ட்டிக்கு போயிருக்கக் கூடாது- தனக்கு நேர்ந்த Metoo அனுபவம் பற்றி பேசிய நிவேதா பெத்துராஜ்.
விஜய் ஆண்டனி சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவரை சினிமாவில் அறிமுகம் செய்தது விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் தான். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள விஜய் ஆண்டனி, விஜய் வீட்டை நான் வாங்கவில்லை அங்கே நான் வாடகைக்கு தான் இருந்து வருகிறேன்.
வீடியோவில் 5 : 57 நிமிடத்தில் பார்க்கவும்
நான் இதற்கு முன்னர் நான் வேறு ஒரு வீட்டில் 10 வருடமாக ஒரு வீட்டில் இருந்தேன்.அதனால் அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டார். அப்போது நான் வேறு வீட்டை தேடிக்கொண்டு இருக்கும் போது ஷோபனா மேடம் தான் சாலிகிராமம் வீட்டில் வந்துவிட சொன்னார்கள். ஆனால், அதுமிகப்பெரிய வீடு அதனால் நான் அங்கேயே ஸ்டூடியோ எல்லாம் அமைத்து கொஞ்சம் பிஸியாக வைத்துக்கொண்டு உள்ளேன் என்று கூறியுள்ளார்.