விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கடந்த வாரம் இனியா, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிக்கு சென்று இருந்தது மிக பெரிய பிரச்சனை ஆகி இறுதியில் ராதிகா தான் இனியாவை காப்பாற்றி இருந்தார். இதை அறிந்த வீட்டில் உள்ள எல்லோருமே இனியாவை திட்டி இருந்தார்கள். பின் கல்லூரிக்கு இனியா, பாக்கியா இருவரும் சென்று இருந்தார்கள். கடைசியில் பாக்யா கல்லூரி முதல்வரிடம் பேசி இனியாவின் பிரச்சனையை எப்படியோ முடித்து வைத்தார். இந்த வாரம், இனியா நடந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு இறந்து போக முடிவு எடுத்து கடிதம் எழுதி இருந்தார்.
அதை பார்த்து அதிர்ச்சியான பாக்கியா இனியாவை திட்டி அறிவுரை சொல்லி இருந்தார். இனிமேல் இந்த தவறு செய்ய மாட்டேன் என்று இனியாவும் சொன்னார். இன்னொரு பக்கம், கோபி- ராதிகா இடையே சண்டை நடந்தது. கோபத்தில் ராதிகா, எதற்கு தான் உங்களை திருமணம் செய்து கொண்டேனோ? என புலம்ப, உடனே கோபி, உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி ஆனது என சொல்ல, விவாகரத்து கொடுத்து விட்டு நிம்மதியாக உன் குடும்பத்துடனே போய் சேருங்கள் என்று ராதிகா சொன்னார். பின் கோபத்தில் கோபி வெளியே சென்று விட்டார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
பின், எழிலுக்கு சரியான வேலை இல்லை என்று ஈஸ்வரி திட்டி இருந்தார். கோபி வழக்கம் போல் தன்னுடைய நண்பருடன் பாரில் குடித்துக்கொண்டு வீட்டில் நடந்ததை எல்லாம் பேச அப்போது புது நபர் ஒருவர் என்ட்ரி கொடுத்தார். அவரிடம் கோபி, பாக்கியா ரெஸ்டாரன்ட்டை கெடுக்க திட்டம் போட்டார். அதன் பின் எழில் மீண்டும் சினிமா வாய்ப்பு தேடி சென்றிருந்தார். ஆனால், அங்கு அவரைப் பற்றி தெரிந்து கொண்டு வாய்ப்பு தர முடியாது என்று மறுத்து இருந்தார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் செழியன், தனக்கு புதிய ஆர்டர் கிடைத்தது என்று சொல்லி சந்தோஷப்பட்டு தன்னுடைய சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுத்தார்.
சீரியல் கதை:
அந்த சமயம் பார்த்து எழில் வீட்டுக்கு வந்தார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காததை தெரிந்த ஈஸ்வரி, எழிலை பயங்கர மோசமாக திட்டி இருந்தார். எழில் எதுவும் பேசாமல் அழுது கொண்டே சென்று விட்டார். நேற்று எபிசோடில், எழில் பாட்டி சொன்னது நினைத்து மாடியில் கண்கலங்கி அழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அமிர்தா மற்றும் பாக்கியா அவருக்கு ஆறுதலாக பேசி இருந்தார்கள். அடுத்த நாள் ஜெனி கர்ப்பமாக இருப்பது வீட்டில் எல்லோருக்கும் எல்லோருக்கும் தெரிந்து சந்தோஷப்படுகிறார்கள்.
கடந்த வாரம் எபிசோட்:
ஈஸ்வரி, ஜெனியை கட்டிப்பிடித்து வாழ்த்து சொல்லி சந்தோஷப்பட்டார். வீட்டில் உள்ள எல்லோருமே ஜெனிக்கு வாழ்த்துக்களை சொல்கிறார்கள். கடைசியில் அமிர்தாவை பார்த்து ஈஸ்வரி, நீ எப்போது குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறாய்? உங்களுக்கு என்று ஒரு குழந்தை வேண்டாமா? என்று இந்த முறை மோசமாக அமிர்தாவை திட்டி இருந்தார். அமிர்தாவும் எதுவும் பேச முடியாமல் அழுது கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா எவ்வளவு சொல்லியும் ஈஸ்வரி கேட்கவில்லை. இதனால் மனமுடைந்து அமிர்தா அழுது கொண்டு இருந்தார்.
இன்றைய எபிசோட்:
பின் பாக்கியா, அமிர்தாவை சமாதானம் செய்கிறார். இருந்தாலுமே, மனம் உடைந்து அமிர்தா கோவிலுக்கு செல்கிறார். அப்போது அங்கு வந்து எழில், அமிர்தாவின் முகம் மாறி இருப்பதை கண்டு என்ன நடந்தது? என்று கேட்க அவரும் வீட்டில் நடந்தது எல்லாத்தையும் சொல்லி விடுவார். இதனால் கோபப்பட்டு வீட்டிற்கு வந்த எழில், தன்னுடைய பாட்டி ஈஸ்வரியிடம் கோபப்பட்டு பேசுகிறார். அதற்கு ஈஸ்வரி, பொண்டாட்டி பத்த வைத்து விட்டாளா? என்று பேச, நீங்கள் எதற்காக அவளிடம் குழந்தை பற்றி கேட்டீர்கள்? என்று இருவருக்கும் இடையே சண்டை நடக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.