போலீசுடன் வந்த கணேஷ், ஆடிப்போன எழில், நிலா குட்டி கொடுத்த ட்விஸ்ட் – என்ன செய்ய போகிறார் பாக்கியா?

0
232
- Advertisement -

பரபரப்பான உச்சகட்டத்தில் செல்லும் பாக்கியலட்சுமி சீரியல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை தொடர்ந்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று சுற்றி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கேண்டினில் சில பிரச்சினை வந்ததால் ராதிகா கேண்டின் ஆர்டரை கேன்சல் செய்து விடுகிறார். இதனால் பாக்கியா மனம் நொந்து போராடி வேறு ஏதாவது கேண்டின் ஆர்டர் கிடைக்க கடுமையாக உழைக்கிறார்.

சீரியல் கதை:

பின் பாக்கியாவிற்கு பொருட்காட்சி நடத்தும் இடத்தில் சமைக்கும் ஆர்டர் கிடைக்கிறது. அதை அவர் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றிகரமாக செய்து முடிக்கிறார். இன்னொரு பக்கம், தன் மகன்களின் வாழ்க்கையை காப்பாற்ற போராடுகிறார் பாக்கியா. மேலும், சில வாரமாகவே சீரியலில் அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் வருகிறார். அமிர்தாவையும் தன் குழந்தையும் கையோடு அழைத்துச் செல்ல கணேஷ் முயற்சிக்கிறார். இந்த உண்மை பாக்கியாவுக்கு தெரிகிறது.

-விளம்பரம்-

மகன்களுக்காக போராடும் பாக்கியா:

அதே சமயம் செழியினை எப்படியாவது அடைய வேண்டும் என்று மாலினி நினைக்கிறார். ஒரு கட்டத்தில் செழியன் எல்லா உண்மையும் அவருடைய அம்மா பாக்யாவிடம் சொல்லி விடுகிறார். ஜெனி-செழியன் பிரிர்ந்து இருக்கிறார்கள். கடந்த வாரம் ஜெனியின் அப்பா செழியனுக்கு விவாகரத்து நோட்டீசை அனுப்பி விடுகிறார். இரு குடும்பமும் பேசுகிறார்கள். இருந்தாலும் ஜெனியின் அப்பா ஒத்துகொள்ளவில்லை. பின் நீதிமன்றத்தில்ஜெனி- செலியனுடைய விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது . இன்னொரு பக்கம் கணேஷ் உயிருடன் இருக்கும் விஷயம் எழில், அமிர்தா, பாக்கியா குடும்பத்திற்கு தெரிய வருகிறது.

சீரியல் ட்ராக்:

கணேஷ் வீட்டிற்கு வந்து அமிர்தாவையும் குழந்தையும் அழைத்து செல்ல சண்டை போடுகிறார். ஆனால், எழில் குடும்பம் ஒத்துக்கொள்ளவில்லை. இப்படி இருக்கும் நிலையில் கணேஷ், போலீசை பாக்கியா வீட்டிற்கு கொண்டு வந்து அமிர்தாவை என்னுடன் அனுப்பி வைக்க உதவுங்கள் என்று கேட்கிறார். இதனால் போலீசும் அமிர்தாவிடம் கேட்கிறது. இனிவரும் நாட்களில் அமிர்தா, கணேஷ் உடன் செல்வாரா? இல்லை எழிலை ஏற்றுக் கொள்வாரா? ஜெனி- செழியனின் நிலைமை என்ன? பாக்யா தன் மகள்களின் வாழ்க்கைக்காக என்ன செய்யப் போகிறார்? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement