‘பேத்திக்கு fees நான் கட்டிட்றேன்’ – ஷோவில் வாக்கு கொடுத்துவிட்டு டீலில் விட்டுள்ள கோபிநாத். இவரா இப்படி.

0
227
- Advertisement -

நீயா நானா கோபிநாத் செய்த செயலால் கல்லூரி மாணவியின் படிப்பே தடைபட்டு இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “நீயா நானா” கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லிவிடும். அந்த அளவிற்கு கோபிநாத் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவது தான் இவரது ப்ளஸ் பாயிண்ட். கோபிநாத் அவர்கள் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தான் அறிமுகமானார். அதன் பின்னர் ஜெயா டிவி, என்டிடிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியில் விவாத நடுவராக பணியாற்றினார். பின்னர் 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா நானா” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி. “நீயா நானா” நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் தான் கோபிநாத் அவர்கள் சினிமாவில் காலடி வைத்தார். பின் இவர் வாமனன், தோனி, நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

நீயா நானா நிகழ்ச்சி:

தற்போதும் இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, நீயா நானா கோபிநாத் அவர்கள் பல பேருக்கு உதவிகள் செய்து இருக்கிறார். அது அதுமட்டுமில்லாமல் இவர் சமூக ஆர்வலராகவும் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து கொண்டு வருகிறார் என்று பல தகவல்கள் வந்து இருக்கிறது. இந்த நிலையில் நீயா நானா கோபிநாத் குறித்த ஒரு திடுக்கிடும் தகவல் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

கோபிநாத் கொடுத்த வாக்கு:

அதாவது, 2016 ஆம் ஆண்டு நீயா நானா நிகழ்ச்சியில் வயதான நபர் ஒருவர் தன்னுடைய பேத்தியின் படிப்புக்காக கஷ்டப்படுவதாக கூறியிருந்தார். அதில், இன்ஜினியரிங் கல்லூரியில் எப்படியோ கஷ்டப்பட்டு பத்தாயிரம் கட்டிவிட்டதாகவும், மீதி 26,000 பேலன்ஸ் இருப்பதாகவும், அதை எப்படியாவது கட்டி விடுவேன் என்று கூறியிருந்தார். இதை பார்ப்போருக்கும் கண் கலங்க வைத்தது. உடனே கோபிநாத், நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்கள் பேத்தி படிப்பதற்கு தேவையான மொத்த பணத்தையும் நான் கொடுக்கிறேன் என்று கூறியிருந்தார்.

மாணவி பதிவிட்ட வீடியோ:

இதை அடுத்து அந்த மாணவி, கோபிநாத்தின் மேனேஜரிடம் கால் செய்து கேட்டிருக்கிறார். அவர்களும் ஆரம்பத்தில் இரண்டு, மூன்று முறை சார் பிசியாக இருக்கிறார்,பிறகு கூப்பிடுகிறோம் என்று சொன்னாரகள். நானும் தானாகவே உதவி செய்ய வந்தவர்களை தொல்லை பண்ண கூடாது, அவர்களே கூப்பிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். பின் பல மாதங்கள் கழிந்தும் அவர்கள் கூப்பிடவும் இல்லை. எனக்கும் கூப்பிட வேண்டாம் என்று தோன்றி விட்டது. நான் என் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்காக தேடிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய தாத்தாவை நான் நன்றாக பார்த்துக் கொள்வேன்.

நெட்டிசன்கள் வருத்தம்:

அவர்கள் உதவி செய்கிறேன் என்று சொன்னதைப் பற்றி கவலை இல்லை. செய்கிறேன் என்றால் செய்யணும். இப்படி ஒருவருக்கு உறுதியாக சொல்லிவிட்டு ஏமாற்றக்கூடாது என்று வருத்தத்துடன் அந்த மாணவி பேசியிருந்தார். தற்போது இவர் பேசி இருக்கும் வீடியோ வெளியானதை தொடர்ந்து பலருமே, கோபிநாத்தா இப்படி செய்வது? என்னாச்சு, நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை? என்று நெட்டிசன்கள் அதிர்ச்சியில் கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement