விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' பாக்கியா ரெஸ்டாரண்ட் செல்வதற்காக மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது இனியா கல்லூரிக்கு நேரமாகவே கிளம்புகிறார். பின் ஒவ்வொருவரிடமும் காசு வாங்கிப் போனார். இதையெல்லாம் பார்த்து கோபிக்கு சந்தேகம் வந்தது. உடனே அவர், இனியாவை தன்னுடைய காரிலேயே அழைத்து சென்றார். ஆனால், இனியா புக் வாங்கனும் என்று இறங்கிக் கொண்டார். இனியாவிற்கு தெரியாமல் கோபி பாலோ செய்தார். அப்போது ரெஸ்டாரண்டில் இனியா, ஆகாசுடன் பேசி இருப்பதை கோபி பார்த்தார். பின் கோபியை பார்த்தவுடன் இனியா-ஆகாஷ் இருவரும் ஷாக் ஆனார்கள்.

கோபி, இதற்கு தான் இங்கு வந்தாயா? கிளம்பு என்று இனியாவின் கையைப் பிடித்து அழைத்தார். ஆகாஷ் பேச வந்ததற்கும் அவனை திட்டி விட்டு அங்கிருந்து இனியாவை அழைத்துக் கொண்டு வந்தார். அதற்குப்பின் கோபி, உன்னுடைய போனை கொடு என்று வாங்கி செக் பண்ணி இருந்தார். அதில் ஆகாசுடன் அவர் பேசி இருப்பதை பார்த்து ரொம்பவே கோபி கோபப்பட்டார். இனியா மன்னிப்பு கேட்டும் கெஞ்சி அழுதும் கோபி கேட்கவில்லை.
பாக்கியலட்சுமி:
பின் வீட்டிற்கு இனியாவை கோபி அழைத்து வந்ததை பார்த்து எல்லோருமே என்ன ஆனது? ஏன் இனியா வந்துவிட்டாள்? என்று கேட்க, பாக்கியா வரட்டும் என்றார் கோபி. அப்போது பாக்கியா வீட்டிற்கு வந்தார். உடனே கோபி, இனியா ஒரு பையனை காதலிக்கிறார் என்று அவருடைய மொபைலை காண்பித்தவுடன் பாக்கியா ஷாக் ஆனார். வீட்டில் உள்ள எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருந்தார். கோபி, யாரை காதலிக்கிறார் தெரியுமா? நம் வீட்டில் வேலை செய்யும் செல்வியின் மகன் ஆகாஷை தான் காதலிக்கிறார் என்று சொன்னவுடன் இன்னும் எல்லோருக்குமே அதிர்ச்சி ஆனது. என்ன சொல்வது என்று புரியாமல் உறைந்து போனார் பாக்கியா.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் இனியா காதலிக்கிறார் என்ற உண்மை தெரிந்ததும் மொத்த வீடுமே ஷாக் ஆகி கோபப்பட்டார்கள். பாக்கியா என்ன சொல்வது என்றே புரியாமல் உறைந்து விட்டார். ஈஸ்வரி, இனியாவை பயங்கரமாக திட்டி அடித்தார். செழியன்- கோபி இருவருமே, ஸ்டேட்டஸ் தேவையில்லை. வேலைக்காரி பையன் ஒரு ஆளா என்றெல்லாம் ரொம்ப மோசமாக செல்வியையும், ஆகாஷை திட்டி இருந்தார்கள். உடேன ஈஸ்வரி, இதற்கெல்லாம் காரணம் பாக்கியா தான். பிள்ளையை ஒழுங்காக கவனிக்க வேண்டும். எழிலுக்கு காதல் திருமணம் செய்து வைத்ததால் தான் இந்த விளைவு.

சீரியல் ட்ராக்:
எல்லாத்திற்குமே காரணம் பாக்கியா தான் என்று வழக்கம்போல அவள் மீது பழியை போட்டார். அந்த சமயம் பார்த்து செல்வி வீட்டுக்கு வந்தார். உடனே ஈஸ்வரி- செழியன் இருவருமே உங்கள் மகன் செய்த வேலைக்கு என் கண்ணில் பட்டால் அடித்தே கொன்று விடுவேன் என்றெல்லாம் சொன்னார்கள். பின் இனியா காதலிக்கும் விஷயத்தை சொல்லி செல்வியை பயங்கரமாக திட்டி அவமானப்படுத்தி வீட்டை விட்டு அனுப்பி இருந்தார்கள் பாக்கியாவால் எதுவுமே பேச முடியவில்லை. பின் வீட்டிற்கு வந்த செல்வி, தன் மகனிடம் உண்மையை கேட்டு அவனை அடித்தார்.
https://www.youtube.com/watch?v=_rlR9hRpjmk
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் செழியன்- கோபி இருவரும் ஆகாஷின் வீட்டிற்கு சென்று அவனை பயங்கரமாக அடித்து விடுகிறார்கள். இதை அறிந்த பாக்கியா, எதற்காக ஆகாஷ் வீட்டிற்கு சென்று அவனை அடித்தாய் என்று செழியனை கேட்கிறார். அதற்கு செழியன் கொஞ்சம் ஓவராக பேசுகிறார். இதனால் பாக்கியா அடித்து விடுகிறார். உடனே கோபி, என் மகளிடம் அவன் பேசினால் இதுதான் அவனுக்கு கெதி என்று ஆவேசமாக கத்துகிறார். அதற்குப்பின் பாக்கியா, உங்களால் என் பிள்ளைகளுடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனை வருகிறது. தயவு செய்து நீங்கள் இந்த வீட்டை விட்டு கிளம்புங்கள் என்று சொன்னவுடன் கோபி ஷாக் ஆகிறார். இனி வரும் நாட்களில் என்ன நடக்கப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






