விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இனியா, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து படிக்க செல்கிறேன் என்று பொய் சொல்லி பார்ட்டியில் ஆட்டம் பாட்டம் என்று சந்தோசமாக இருந்தார். பின் பார்ட்டியில் நடந்த சண்டையில் போலீஸ் அனைவரையும் கைது செய்து இருந்தது. அந்த சமயம் அங்கு வந்த ராதிகா, இனியாவை காப்பாற்றி இருந்தார். மேலும், வீட்டில் எல்லோருமே இனியாவை திட்டி இருந்தார்கள். கடந்த வாரம், கல்லூரியில் பார்ட்டிக்கு சென்ற மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று நிர்வாகம் சொல்லி இருந்தது.

பின் உண்மை அறிந்த பாக்கியா கல்லூரிக்கு போய் இருந்தார். கல்லூரியில், இனியாவுக்கு டிசி கொடுக்கிறேன் என்று சொன்னவுடன் பாக்கியா மன்னிப்பு கேட்க, அப்போது பிரின்சிபால் இனியா அப்பா வரவேண்டும் என்று சொன்னவுடன் ஈஸ்வரி, அவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு போய்விட்டான். அவன் பொறுப்பான அப்பாவே கிடையாது என்று கோபமாக சொல்லி இருந்தார். இந்த விஷயம் கோபிக்கு தெரிய வந்து ஈஸ்வரியிடம் கேட்டு சண்டை போட்டு இருந்தார். இன்னொரு பக்கம் வீட்டில் இனியா நடந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு புலம்பி அழுதார்.
பாக்கியலட்சுமி சீரியல்:
கடைசியில் அவர், இறந்து போக முடிவு எடுத்து கடிதம் எழுதி இருந்தார். பின் இனியா யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியே போக பார்த்தார். அதை பார்த்த பாக்கியா, கடிதத்தை படித்து பார்த்து அதிர்ச்சி ஆகி இருந்தார். அப்போது பாக்கியா, இனியா பேசுவதை கேட்டு வந்த ஜெனி, இனியாவுக்கு அறிவுரை சொலன்னார். இனிமேல் இந்த தவறு செய்ய மாட்டேன் என்று இனியா சொல்கிறார். இருந்தாலும், இனியா செய்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்த பாக்கியாவிற்கு ஈஸ்வரி ஆறுதல் சொல்கிறார்.

நேற்று எபிசோட்:
மேலும், நேற்று எபிசோடில் கோபி, ராதிகா இடையே சண்டை நடந்தது. கோபத்தில் ராதிகா, எதற்கு தான் உங்களை திருமணம் செய்து கொண்டேனோ? என புலம்பினார். உடனே கோபி, உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. நான் என் குடும்பத்தை இழந்து நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன் என்று சொல்ல, விவாகரத்து கொடுத்து விட்டு நிம்மதியாக உன் குடும்பத்துடனே போய் சேருங்கள் என்று ராதிகா சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு வெளியே வந்த கோபி, பாக்யா வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து ஏங்கி வருத்தப்படுகிறார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோடில், பாக்கியா, வீட்டில் நடந்தை பழனிச்சாமி இடம் சொல்ல, அவர் ஆறுதலாக பேசுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் எழில், சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்ட ஈஸ்வரி, எழிலை திட்டி ஒழுங்காக வேறு வேலைக்கு செல். சினிமாவை தூக்கிப்போட்டு சம்பாதித்து செட்டில் ஆகும் வழியை பார் என்று அறிவுரை சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு எழில் வருத்தப்பட்டு பேச அமிர்தா அவருக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
கோபி வழக்கம் போல் தன்னுடைய நண்பருடன் பாரில் குடித்துக்கொண்டு வீட்டில் நடந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது புது நபர் ஒருவர் என்று கொடுக்கிறார். அவரிடம் கோபி சகஜமாக பேச அவரும் கோபியின் ஹோட்டலை விசாரிக்கிறார். கோபியும் போதையில், எனக்கு நன்றாக வருமானம் வருகிறது என்றெல்லாம் பேசுகிறார். பின் பாக்கியா ரெஸ்டாரன்ட் கெடுக்க அந்த நபருடன் சேர்ந்து கோபி ஒரு திட்டம் போடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. இனி வரும் நாட்களில் புதிய நபரால் கோபிக்கு பிரச்சனை வருமா? பாக்யா ரெஸ்டாரன்ட் நிலைமை என்ன? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.






