விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் நிதிஷ் அம்மா, எல்லாத்துக்கும் காரணம் இனியா தான் என்று வழக்கம்போல திட்டிக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து கோபி, இனியா இருவருமே வீட்டுக்கு வந்தார்கள். அப்போது நிதிஷ் அம்மா, நீ வீட்டுக்கு லேட்டா வந்தால் மெசேஜ் போடுவது தானே என்று சொன்னார். அதற்கு இனியா, நான் நிதிஷ்க்கு மெசேஜ் போட்டு விட்டேன். அவர்தான் எந்த பதிலும் சொல்லவில்லை என்றார். உடனே கோபி, நாளைக்கு இனியா பிறந்தநாள். அதனால் ஷாப்பிங் போயிருந்தோம் என்று சொன்னவுடன் சுதாகர், எங்களுக்கு தெரியும். இனியா பிறந்தநாளுக்காக பார்ட்டி ரெடி பண்ணி இருக்கிறோம். கண்டிப்பாக நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்.

மறுநாள் காலையில் இனியாவிற்காக ஈஸ்வரி, பாக்கியா இருவருமே கோவிலில் அர்ச்சனை செய்தார்கள். இன்னொரு பக்கம் சுதாகர், நிதிஷ், நிதிஷுடைய அம்மா மூவருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நிதிஷ் அம்மா, இனியாவை பற்றி திட்டிக் கொண்டிருந்தார். உடனே சுதாகர், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் இனியாவிற்கு வாழ்த்து சொல்ல தான் வேணும். இந்த பார்ட்டியில் நீங்கள் கலந்து கொள்ள தான் வேண்டும் என்று கோபமாக சொன்னார். பின் இனியா வந்தவுடன் எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னார்கள். நிதிஷிக்கு இனியாவின் மீது கோபம் குறையவே இல்லை. இன்னொரு பக்கம் பாக்கியா, கவுன்சிலரை சந்தித்து அவருடைய மனைவியின் உடல்நிலை பற்றி விசாரித்தார்.
பாக்கியலட்சுமி:
நேற்று எபிசோட்டில் இனியா ஆபிஸில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் வேலை செய்பவர்கள் போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது இனியா, அதைப்பற்றி விசாரித்தார். அப்போது ஒருவர், சுதாகர் என்ற பெரிய பிசினஸ்மேன் உடைய பையன் தான் இந்த போதை வழக்கில் சிக்கி இருந்தார். லட்சக்கணக்கில் செலவு செய்து அந்த பையனை பற்றி வெளியில் பேசவிடாமல் பண்ணி விட்டார்கள். ஆறு மாதம் சிறையில் இருந்தான் என்றெல்லாம் சொன்னார்கள். இதைக் கேட்டு இனியா ரொம்பவே ஷாக் ஆகிறார். பின் சுதாகரை பற்றி சோசியல் மீடியாவில் பார்த்தார்.

நேற்று எபிசோட்:
அதில் நிதிஷ் போதை வழக்கில் கைதாகி இருப்பதை பார்த்து இன்னும் அதிர்ச்சி ஆனார் இனியா. பின் வீட்டிற்கு வந்த இனியா, சுதாகரிடம் பேச போனார். ஆனால், பார்ட்டிக்கு உறவினர்கள் எல்லோரும் வந்து இருப்பதால் வேண்டாம் என்று அமைதியாக இனியா வந்து விட்டார். பின் இதைப்பற்றி நிதிஷிடம் இனியா பேசி இருந்தார். வழக்கம் போல நிதிஷ், இனியாவை தவறாக பேசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். பின் பர்த்டே பார்ட்டிக்கு இனியாவின் குடும்பத்திலிருந்து எல்லோருமே வந்தார்கள். எல்லோருமே சந்தோசமாக தன்னுடைய மகளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் இனியா பர்த்டே பார்ட்டி நல்லபடியாக முடிகிறது. இனியா வீட்டில் எல்லோருமே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். அதற்குப்பின் பாக்கியா வீட்டில் எல்லோருமே கிளம்புகிறார்கள். உடனே இனியா, தன்னுடைய அப்பாவை மட்டும் இருக்க சொல்கிறார். பின் இனியா- கோபி இருவரும் தனியாக பேசுகிறார்கள். அப்போது இனியா, நீங்கள் எனக்காக பார்த்த மாப்பிள்ளை எப்படிப்பட்டவர் என்று விசாரித்தீர்களா? உங்களுக்கு அவரைப் பற்றி ஏதாவது தெரியுமா? என்று கேட்கிறார். கோபிக்கு ஒன்றுமே புரியவில்லை. பின் இனியா, நிதிஷ் போதை பழக்கத்துக்கு அடிமையாகி கைதான விஷயத்தை பற்றி சொல்கிறார். கோபி பயங்கர ஷாக் ஆகிறார். பின் இனியா எல்லா ஆதாரங்களையும் காண்பிக்கிறார். இதனால் கோபி ரொம்பவே மனமடைந்து அழுகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் இனியா-கோபி இருவருமே சுதாகரிடம் நடந்ததை பற்றி கேட்கிறார்கள். அதற்கு சுதாகர், இது பெரிய விஷயம் இல்லை. தெரியாமல் சின்ன வயதில் தவறு செய்து விட்டான். அதை விட்டு விடுங்கள் என்று கூலாக செல்கிறார். இதனால் கோபி- சுதாகர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகின்றது. கடைசியில் கோபி, என் மகளை என் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்கிறார். அப்போது சுதாகரின் மனைவி, கல்யாணமான உடனே உங்கள் மகள் உங்கள் வீட்டுக்கு வந்தால் நாலு பேர் தப்பாக பேச மாட்டார்களா? என்று சொல்கிறார். அதற்கு கோபி, எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






