பரபரப்பாக செல்லும் பாக்கியலட்சுமி சீரியல் குறித்து நெட்டிசன்கள் பதிவிடும் விமர்சனம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் என்றால் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள். இந்த தொடர் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல்:
சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி பின் சுற்றி கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கேண்டினில் சில பிரச்சினை வந்ததால் ராதிகா கேண்டின் ஆர்டரை கேன்சல் செய்து விடுகிறார். இதனால் பாக்கியா மனம் நொந்து போராடி வேறு ஏதாவது கேண்டின் ஆர்டர் கிடைக்க கடுமையாக உழைக்கிறார். பின் பாக்கியாவிற்கு சமைக்கும் ஆர்டர் கிடைக்கிறது. அதை அடுத்து இவர் ரெஸ்டாரண்ட் நடத்த இருக்கிறார்.
சீரியல் கதை:
இப்படி இருக்கும் நிலையில் செழியனின் உண்மை முகத்தை அறிந்து ஜெனி வீட்டை விட்டு வெளியேறி விவாகரத்து கொடுக்கிறார். பின் செழியன் மனம் மாறி ஜெனி உடன் சேர்ந்து வாழ நினைக்கிறார். செழியன் வாழ்க்கை நினைத்து மொத்த குடும்பமும் பரிதவித்து இருக்கிறது. இன்னொரு பக்கம், அமிர்தாவின் முதல் கணவர் உயிருடன் வருகிறார். அமிர்தாவையும் தன் குழந்தையும் கையோடு அழைத்துச் செல்ல கணேஷ் முயற்சிக்கிறார். இந்த உண்மை பாக்கியாவுக்கு தெரிகிறது.
மகன்களுக்காக போராடும் பாக்கியா:
அதே சமயம் கணேஷ் உயிருடன் இருக்கும் விஷயம் எழில், அமிர்தா, பாக்கியா குடும்பத்திற்கு தெரிய வருகிறது. கணேஷ், பாக்கியா குடும்பத்துடன் சண்டை போடுகிறார். பின் கணேஷ் உடன் செல்ல அமிர்தா மறுக்கிறார். இன்னொரு பக்கம் ஜெனி தன்னுடைய குழந்தைக்கு பெயர் வைக்க ஏற்பாடு செய்கிறார். அப்போது செழியன், ஈஸ்வரி இருவரும் குழந்தையை யாருக்கும் தெரியாமல் அழைத்துக் கொண்டு வருகிறார்கள். இதை அறிந்து பாக்யா குழந்தையை ஜெனியிடம் ஒப்படைத்துவிட்டு செழியனை கண்டிக்கிறார். இதனால் ஈஸ்வரி, செழியன் இருவருக்குமே பாக்யா மீது கோபம் ஏற்படுகிறது.
நெட்டிசன்கள் விமர்சனம்:
இப்படி சில வாரங்களாகவே சீரியல் எந்த ஒரு சுவாரசியமும் இல்லாமல் செல்வதால் பார்வையாளர்கள் மத்தியில் கடுப்பேற்றி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அமிர்தாவை எப்படியாவது தன்னுடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கணேஷ் போராடுகிறார். இதனால் திட்டம் போட்டு அமிர்தாவை தன் வீட்டுக்கு கணேஷ் வரவைக்கிறார். பின் அமிர்தா கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தன்னுடைய குழந்தையும் அமிர்தாவையும் ஒரு காரில் கடத்தி செல்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் பாக்கியா திகைத்து நிற்கிறார். இதை பார்த்து நெட்டிசங்கள் பலருமே சீரியலை வறுத்தெடுத்து வருகிறார்கள். சிலர் தயவு செய்து இந்த சீரியலை நிறுத்தி விடுங்க என்றெல்லாம் மோசமாக திட்டியும் விமர்சித்தும் வருகிறார்கள்.