டிக்கெட் இலசமாக அறிவித்தும் பாலிவுட் படங்களை பார்க்க வராத ரசிகர்கள் – டாப்ஸி படத்தை பார்க்க வந்த ஒரே ஒரு நபர்.

0
426
taapsee
- Advertisement -

பல சலுகைகள் கொடுத்தும் பாலிவுட் படங்களுக்கு ரசிகர்கள் வராது இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய சினிமா துறையை பொருத்தவரை ஹிந்தி படங்கள் தான் டாப் என்று கூறி இருந்தார்கள். ஆனால், இந்த மாயையை தென்னிந்திய படங்கள் போக்கி இருக்கிறது. சமீபகாலமாக தென்னிந்தியாவில் இருந்து வெளியான திரைப்படங்கள் இந்தி திரையுலகிலும் தங்களுடைய மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் பாகுபலி, புஷ்பா, கேஜிஎப், விக்ரம் போன்ற பல படங்கள் இந்தியில் வெளியாகி பாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தது. இதனால் பாலிவுட் படங்கள் மீதான ஈர்ப்பு இந்தி ரசிகர்கள் மத்தியில் குறைந்திருக்கிறது. சமீப காலமாகவே இந்தி படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு கிடைத்து கிடைப்பதில்லை என்பதை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது.

- Advertisement -

பாலிவுட் படங்களின் நிலைமை:

அந்த வகையில் சமீபத்தில் வெளியான பாலிவுட் முன்னணி நடிகர்களின் படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. அதிலும் கடந்த 15ஆம் வெளியான ரக்ஷா பந்தன் போன்ற திரைப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேசப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் அதிக எதிர்பார்ப்போடு வெளியாகிய ஆமிர் கானின் லால் சிங் சத்தா படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த படத்தை பார்ப்பதற்கு தியேட்டரில் ரசிகர்கள் வரவே இல்லை என்றுதான் சொல்லணும்.

லால் சிங் சத்தா படம்:

பல மொழிகளில் இந்த படத்திற்காக புரோமோஷன் செய்தும் ஒர்கவுட் ஆகவில்லை. இதனால் வசூல் ஆகவில்லை என்று தியேட்டர் உரிமையாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், படத்தை எப்படியாவது ஓட வைத்து வசூலிக்க வேண்டும் என்று திரையரங்குகளும் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஹிந்தி படத்தை காண்பதற்கு பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கிறது.

-விளம்பரம்-

பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் விட்ட சிறப்பு சலுகை:

அதாவது, இந்தி படங்களை காண 3 டிக்கெட்டுகளை வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என கூவிக் கூவி விற்று இருக்கிறார்கள். இருந்தும் ரசிகர்கள் யாரும் படம் பார்க்க வரவில்லை. ஆனால், இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ள தெலுங்கு படமான கார்த்திகேயா 2 படம் இந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று தியேட்டர் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதனால் பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கார்த்திகேயா 2:

சமீபத்தில் நடிகை அனுபமா நடிப்பில் வெளியாகி இருந்த படம் ’கார்த்திகேயா 2’. இந்த படத்தில் அனுபமாவுக்கு ஜோடியாக நிகில் நடித்திருந்தார். சந்து மொண்டேட்டி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் கடந்த 13ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றி விழா கூட சமீபத்தில் நடைபெற்று இருந்தது.

Advertisement