பாக்கியலட்சுமி சீரியலில் இறந்த திடீர் கேரக்டர் – நாளை முதல் இவங்க சீரியலில் இல்லை.

0
1138
Baakiyalakshmi
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக பல வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

பாக்கியலட்சுமி :

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக திகழ்கின்றது. குடும்ப பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்தி உருவாகி உள்ளது. தற்போது இந்த சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொடுக்கிறது.

- Advertisement -

இனியா தோழி :

மேலும், சில மாதங்களாகவே பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்கள். இதனால் பல மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்கள். அதை மையப்படுத்தி தான் இந்த வாரம் பாக்கியலட்சுமி சீரியல் நகர்கிறது. சீரியலில் இனியாவுக்கும், அவருடைய தோழிகளுக்கும் ஒரு ஆசிரியர் சில மோசமான தொந்தரவுகளை கொடுக்கிறார்.

திடீர் தற்கொலை :

இதனால் இனியாவின் தோழி ஒருவர் கடுமையாக பாதிக்கப்படுகிறாள். இதை இனியா வீட்டில் சொல்லவும் முடியாமல் பள்ளிக்கு வரவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இந்த சீரியலின் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இனியா தனது தோழி தற்கொலை செய்து கொண்டதாக வீட்டில் கதறி அழுகிறார்.

-விளம்பரம்-

தற்போது இந்த ப்ரோமோ வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த ப்ரோமோ பார்த்த மக்கள் பலரும் தங்கள் மகளுக்கு இந்த விஷயம் குறித்து புரிய வைக்க வேண்டும் என கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதோடு பலரும் இந்த வீடியோவுக்கு ஆதரவளித்து வருகிறார்கள். சமீபத்தில் நடந்த பள்ளி மாணவியின் தற்கொலை சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாதித்திருந்தது. இதனால் பொதுமக்கள் பலரும் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தார்கள்.

இனி இதுபோன்று நடக்கும் கொடுமைகளை தடுக்க வேண்டும் என்றும் பல அமைப்புகள் போராடி இருந்தார்கள். இந்த சூழ்நிலையில் சீரியலில் இந்த மாதிரி காட்சிகள் வருவது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறி வருகின்றனர். அதே போல் இந்த மாதிரி நிஜ வாழ்க்கையில் தங்கள் மகள்களுக்கு இருக்கும் பிரச்சினையை பெற்றோர்கள் புரிந்து செயல்பட வேண்டும் என்றும் இந்த மாதிரி கொடூர வக்கிர புத்தியை கொண்ட ஆசிரியர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றார்கள்.

Advertisement