மகளுக்காக சென்ற பாக்கியாவை அசிங்கப்படுத்திய கோபி – இனியா கொடுத்த செம ட்விஸ்ட்.

0
441
Baakiyalakshmi
- Advertisement -

பாக்கியாவை அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கும் சம்பவம் குறித்த அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் இவர்களுடன் ரேஷ்மா, விஷால், ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. சீரியலில் பாக்கியா- கோபிக்கு விவாகரத்து ஆகி விடுகிறது. பின் கோபி அவர் ஆசைப்பட்ட மாதிரி ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபியின் மொத்த குடும்பமுமே கோபி மீது கோபத்தில் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

மேலும், சீரியலில், இனியா வீட்டில் உள்ள எல்லோருடனும் சண்டை போட்டு கோபி வீட்டிற்கு சென்று விடுகிறார். பின் கோபியின் அப்பா ராமமூர்த்தியும் கோபியின் வீட்டிற்க்கே வந்து தங்குகிறார். இனியா பள்ளியில் டூர் சென்ற பள்ளி பேருந்து விபத்துக்குள்ளாகிறது என்ற தகவல் பாக்யாவிற்கும், கோபிக்கும் தெரிய வருகிறது. பின் கோபி-பாக்கியா இருவரும் பள்ளிக்கு செல்கிறார்கள். ஆனால், பள்ளியில் பாக்கியா இருப்பதை பார்த்த கோபி யாருக்கும் தெரியாமல் இனியாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்கிறார்.

சீரியலின் கதை:

பாக்யா பள்ளியில் விசாரிக்கிறார். அவருடைய அப்பா அழைத்து சென்று விட்டார் என்று கூறியவுடன் கோபியின் வீட்டிற்கு வருகிறார் பாக்கியா. இனியா உன்னை பார்க்க வேண்டும். வெளியே வா இனியா! என்று அழுது புலம்புகிறார். ஆனால், கோபி இனியாவை வெளியே வரவிடாமல் நீ எதற்கு இங்கே வந்தாய், அவள் என்னுடைய மகள் என்று திட்டி துரத்த பார்க்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, இனியாவை பார்க்க வேண்டும் என்று எழிலும், பாக்கியாவும் கோபி இடம் சண்டை போடுகிறார்கள். ஆனால், கோபி இனியா இருக்கும் அறையை பூட்டிக்கொண்டு அவரைப் பார்க்க முடியாது. வெளியே செல் என்று சொல்கிறார். இருந்தும், பாக்யா தன் மகளை பார்க்க வேண்டும் என்று அழுகிறார்.

-விளம்பரம்-

கோபி செய்த செயல்:

உடனே, கோபி வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இந்த வீட்டை விட்டு வெளியே போ. இப்படித்தானே என் குடும்பத்தை விட்டு என்னை துரத்தினாய். நீயே வெளியே போகிறாயா? இல்லை கழுத்தைப் பிடித்து வெளியே அனுப்பட்டுமா? என்று பயங்கரமாக பாக்யாவை திட்டுகிறார். பின் ராமமூர்த்தி, இனியாவிற்கு ஒண்ணும் ஆகவில்லை. நீ கவலைப்படாதே, இங்கு இருந்து அசிங்கப்படாதே வீட்டிற்கு போ என்று சொல்லி அனுப்புகிறார். எழிலும் பாக்யாவை சமாதானப்படுத்தி கூட்டிக்கொண்டு செல்கிறார். பின் ராமமூர்த்தி இனியாவிடம் ஏன் உன் அம்மா வந்து பேசும்போது பேசவில்லை என்று கேட்டதற்கு நான் சென்று இருந்தால் அப்பா என் மீது கோபப்பட்டு இருப்பார்.

ராதிகாவுக்கு காத்து இருந்த அதிர்ச்சி:

அப்பா என் மீது கோபப்படாமல் இருந்தால் நான் நம்ம வீட்டுக்கு அப்பாவை அழைத்து செல்ல வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டு ராதிகா, உங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அவர் என்னை திருமணம் செய்து கொண்டார். அவர் எப்படி வருவார்? என்று கேட்கிறார். உடனே அவர்களுக்குள் தான் சண்டைத் தவிர எங்களை அப்பாவுக்கு பிடிக்காது என்று சொல்லவில்லை. நான் எப்படியாவது என் அப்பாவை வீட்டிற்கு அழைத்து செல்வேன் என்று சொல்கிறார். இதை கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இதோடு சீரியல் முடிகிறது. இனிவரும் காலங்களில் இனியா கோபியை அழைத்து செல்வாரா? இல்லை இனியாவிற்கு கோபியின் சுயரூபம் தெரிந்து கொண்டு பாக்யாவிடமே செல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement