GP முத்துவிடம் சசிகுமார் வைத்த திடீர் கோரிக்கை. என்ன தெரியுமா ?

0
385
- Advertisement -

ஜி பி முத்துவிற்கு நடிகர் சசிகுமார் வைத்திருக்கும் கோரிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஜிபி முத்து. டிக்டாக் நண்பர்களே என்ற வார்த்தையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ஜி பி முத்து. இவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். இவர் 3ஆவது வரை தான் படித்து இருக்கிறார். இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-

இவர் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார். அதிலும் யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் என்று சொல்லலாம். ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் வேகமாக வளரும் யூடுயூப் சேனல்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து:

மேலும், யூடுயூபில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. அதோடு ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலக்கி கொண்டு இருந்தார். இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டது ஜி பி முத்து தான். அதோடு இவர் இறுதி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

gpmuthu

ஜிபி முத்து நடித்த படம்:

ஆனால், இவர் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது பலருக்குமே ஷாக்கை கொடுத்திருக்கிறது. மேலும், இவர் பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 14 நாட்கள் இருந்திருக்கிறார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பிருந்ததை விட அதிகமாக ஜிபி முத்துவிற்கு ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது .நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு ஜி பி முத்து சன்னி லியோனுடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்திருந்தார்.

-விளம்பரம்-

ஜிபி முத்து பட வாய்ப்பு:

இவர் சன்னி லியோனுடன் இணைந்து ‘Oh My Ghosh’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். காமெடி நடிகர் சதீஷ், குக் வித் கோமாளி தர்ஷா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு ஜிபி முத்துக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் ஜிபி முத்துவிற்கு நடிகர் சசிகுமார் கோரிக்கை வைத்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

சசிகுமார் வைத்த கோரிக்கை:

அதாவது, ஜி பி முத்து பிரபலமானது அவரை விமர்சித்து வரும் கடிதத்தை படித்ததன் மூலம் தான். இதை கருத்தில் கொண்டு சசிகுமார் அவர்கள் ஜி பி முத்துவிற்கு வீடியோ கால் மூலமாக பேசி இருக்கிறார். அதில் அவர், நீங்கள் இப்போது செலிப்ரட்டி ஆகி விட்டீர்கள். இனிமேல் நீங்கள் நெகட்டிவான விமர்சனங்களை பேசாதீர்கள். பாசிட்டிவான நிறைய விஷயங்களை பேசுங்கள் என்று கூறியிருக்கிறார். இதை ஜி பி முத்துவும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்.

Advertisement