ராதிகா செய்யும் அட்ராசிட்டியால் கடுப்பாகும் ஈஸ்வரி, தத்தளிக்கும் கோபி – விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
296
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியா சொன்ன அறிவுரையால் கோபி மனம் மாறி ராதிகாவை தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆனால், அது ஈஸ்வரிக்கு பிடிக்கவில்லை. இதனால் ஈஸ்வரி, கோபி இடையே வாக்குவாதம் ஆனது. அதன் பின் பாக்கியா, கோபி-ராதிகா தங்குவதற்கு வாடகை கேட்க, கோபி சம்மதம் சொன்னார். இதை எல்லாம் பார்த்து ஈஸ்வரிக்கு கோபம் அதிகமாகி பாக்கியாவிடம் கத்தினார். ஆனால், பாக்கியா அதை பற்றி கவலைப்படவில்லை. பின் ரூமில் தனியாக தூங்க மயூ ரொம்ப கவலையாக இருந்தார். உடனே பாக்கியா அவருக்கு ஆறுதல் சொல்லி தூங்க வைத்தார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் கோபி, பாக்கியா சொன்னதை ராதிகாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கோபி, பாக்கியா ரொம்ப திறைமையானவள், புத்திசாலி என்று பயங்கரமாக புகழ்ந்து பேசி இருந்தார். ஆனால், ராதிகா கோபப்படாமல் அமைதியாக இருந்தார். மறுநாள் காலையில் பாக்கியா சமைத்துக் கொண்டிருக்க, அங்கு வந்த ராதிகா, நானும் சமைத்துக் கொள்கிறேன் என்றவுடன் பாக்கியா எதுவுமே சொல்லவில்லை. பின் இருவருமே கலகலப்பாக பேசி சமைத்துக் கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

இதை பார்த்து ஈஸ்வரிக்கு பயங்கர கோபம் வந்தது. ஆனால், கோபி மட்டும் ரொம்ப சந்தோஷப்பட்டார். இதை பற்றி ஈஸ்வரி, கோபி இடம் பேசி இருந்தார். அதற்கு அவர், பாக்கியா சொன்னது சரி தான். ரொம்ப நல்லவள் என்று எல்லாம் பேசினார். அதற்குப்பின் கோபி, பாக்யாவிடம் வாடகை பணத்தை கொடுத்தார். பின் எல்லோரும் வீட்டில் ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ராதிகா வந்தவுடன் ஈஸ்வரி கோபப்பட்டார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் பாக்கியா, ராதிகா-கோபியை உட்கார்ந்து சாப்பிட சொன்னார். அப்போது ராதிகா, உப்புமாவை சமைத்து வைத்து இருந்தார். இதை பார்த்தவுடன் கோபி ஷாக் ஆனார். மற்றவர்கள் எல்லோருமே அதிர்ச்சியில் இருந்தார்கள். உடனே ஈஸ்வரி, இதெல்லாம் ஒரு சாப்பாடா? உடம்பு முடியாதவனுக்கு இது தருவதா? என்று கேட்டவுடன் ராதிகா, இதையும் சாப்பிடலாம் என்று சொன்னார். மயூ, கோபியால் எதுவுமே பேச முடியவில்லை. வேறு வழியில்லாமல் சாப்பிட்டார்கள். அதற்குப்பின் இனியா, ராதிகா வந்தது பற்றி தன்னுடைய அம்மாவிடம் சண்டை போட்டார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

அதற்கு பாக்கியா, இதற்கெல்லாம் உங்க அப்பா தான் காரணம். எதுவாக இருந்தாலும் உன் அப்பாவிடம் பேசு, எனக்கு வேலைக்கு நேரமாகிறது என்று கிளம்பி விட்டார். பின் இனியா இதை பற்றி தன்னுடைய அப்பாவிடம் பேச போக, அவர் தன்னுடைய உடல்நிலை பற்றி பேசிக்கொண்டிருப்பதால் எதுவும் பேசாமல் அமைதியாக வந்து விட்டார். அதற்கு பின் ராதிகா சமைத்த சாப்பாட்டை பார்த்து கோபி ஷாக்காகி வேறு வழியில்லாமல் சாப்பிட போனார். பின் ஈஸ்வரி- கோபி இருவருமே பாக்கியலட்சுமி மாற்றத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோபி, தன்னுடைய அம்மாவுடன் வாக்கிங் போக நினைக்கிறார். உடனே ராதிகா, நாம் போகலாம் என்று அவரை அழைத்து செல்கிறார். அதற்கு பின் ஹாஸ்பிடலுக்கு போகணும் என்று ஈஸ்வரி, கோபியை கூப்பிட்டார். அதற்கு ராதிகா, நான் அழைத்து செல்கிறேன் என்று ஹாஸ்பிடல் போகிறார். அங்கு ஈஸ்வரியை, டாக்டர் கூட பார்க்க விடாமல் ராதிகாவே உள்ளே சென்று பார்க்கிறார். இதையெல்லாம் நினைத்து வீட்டில் ஈஸ்வரி எமோஷனலாக பேசுகிறார். பின் கோபி, எனக்கு பிரஷர் இல்லாமல் இருந்தால் நான் நன்றாக இருப்பேன். நீங்கள் எதுவும் பேச வேண்டாம் அம்மா என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி, நீ தான் முக்கியம் என்று சொன்னவுடன் எனக்கு உங்களைப் பற்றி தெரியும் அம்மா என்று ரொம்ப ஐஸ் வைத்து பேசுகிறார்.

Advertisement