கோபியின் செயலால் அவமானப்பட்டு நிற்கும் இனியா, பாக்கியா என்ன செய்யப் போகிறார்? பாக்கியலட்சுமி

0
164
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபி, தன்னுடைய செப்புகளை பாக்கியாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இன்னொரு பக்கம் ராதிகா, கோபிக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது கோபி, சமையல் ஆர்டரை பற்றியும், பாக்யா செய்யும் வேலையைப் பற்றியும் ரொம்ப புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கேட்டு ராதிகாவிற்கு வெறுப்பு தான் வந்தது. அதற்குப்பின் வீட்டில் பாக்யா, வேறு வழியில்லாமல் தான் கோபி சொன்ன ஆஃபரை ஏற்றுக்கொண்டேன். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்று சொன்னார். அதற்கு ராதிகா, எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் சமையல் ஆர்டருக்கான வேலைகள் மும்முரமாக நடந்தது. கோபியும் பாக்யாவிற்கு உதவியாக சமையல் செய்து இருந்தார். பரபரப்பாக பாக்கியா வேலை செய்வதை பார்த்து கோபி ஆச்சரியப்பட்டார்.
பின் இதை பற்றி தன்னுடைய அம்மாவிடம் பேச, அவருமே பாக்கியாவை புகழ்ந்து பேசி இருந்தார். பின் ஆர்டர் கொடுத்தவர் சமையல் நடக்கும் இடத்திற்கு வந்து இருந்தார். உடனே தான் சமைத்த உணவுகள் எல்லாம் பாக்கியா கொடுக்க, அவரும் சாப்பிட்டு பார்த்து பாக்யாவின் சமையலை பாராட்டி இருந்தார். நேற்று எபிசோட்டில் பாக்கியா, நல்லபடியாக தன்னுடைய சமையல் ஆர்டரை செய்து முடித்து விட்டார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி:

கோபி, பாக்கியாவின் திறமையை பாராட்டி பேசிருந்தார். அதற்கு அவர் நன்றி சொன்னார். அதற்கு பின் வீட்டில் ஈஸ்வரி, ராதிகாவை வெறுப்பு ஏற்றுவது போல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஈஸ்வரி, நீ என் மகனை விட்டு சென்றுவிடு. கோபி- பாக்கியா இருவருமே சேர்ந்து விடுவார்கள். நீ அவனை விவாகரத்து செய்துவிடு என்றெல்லாம் சொன்னார். இதனால் கோபப்பட்ட ராதிகா, ஈஸ்வரியை பயங்கரமாக திட்டி இருந்தார். ராதிகா பேசிய பேச்சால் ஈஸ்வரியால் வாயை திறக்க முடியவில்லை. அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

அப்போது பாக்கியா, கோபி உதவி செய்ததற்கு பணம் கொடுத்தார். ஆனால், அவர் வாங்க மறுத்தார். இருந்தும் விடாமல் பாக்கியா கொடுத்து விட்டு, நீங்கள் இன்னும் இந்த வீட்டில் தங்குவதற்கு இரண்டு நாளைக்கு தான் வாடகை கொடுத்து இருக்கிறீர்கள். எப்போது காலி செய்வீர்கள்? என்று கேட்டதற்கு ராதிகா, ரெண்டு நாளில் காலி செய்து விடுவோம் என்று சொன்னவுடன் ஈஸ்வரி- இனியா பதறி போனார்கள். கோபிக்கும் இந்த வீட்டை விட்டு கிளம்ப விருப்பமில்லை. இதைப் பற்றி ராதிகாவிடம் பேசி இருந்தார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராதிகா, என்னால் இனி இந்த வீட்டில் இருக்க முடியாது. நாம் இரண்டு நாளில் கிளம்பி விடலாம் என்று சொல்கிறார்.. உடனே கோபி, என்னுடைய அம்மா ,குழந்தைகளை விட்டு வர முடியாது. இங்கே தான் இருக்கணும். நீயும் எங்கே போகக்கூடாது. எனக்கு எல்லாரும் இருக்கணும் என்று சொல்கிறார். ஆனால், ராதிகா ஏற்றுக்கொள்ளவே இல்லை. இருவருக்கும் இடையே வாக்குவாதம் தான் வந்தது.மறுநாள் காலையில் இனியா காம்பிடிஷனுக்காக எல்லோருமே தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோபி, மயூ- ராதிகா இருவரையும் அழைக்கிறார். ஆனால், இருவருமே வர முடியாது என்று சொல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

ராதிகாவை விடாமல் கட்டாயப்படுத்தி அழைத்துக் கொண்டு போனார் கோபி. பின் கல்லூரியில் இனியாவின் பெற்றோர்களை மேடைக்கு அழைக்கிறார்கள். பாக்கியா போகிறார். அதே போல் கோபி, ராதிகாவையும் மேடைக்கு அழைக்கிறார். ஆனால், ராதிகா வர முடியாது என்று மறுத்துமே கோபி விடாமல் அவரை அழைத்துக்கொண்டு செல்கிறார். மூன்று பேரும் மேடையில் இருப்பதை பார்த்து எல்லோருமே இனியாவை கிண்டல் கேலி செய்கிறார்கள். அதனால் அவர் ரொம்ப அவமானப்படுகிறார்.என்ன சொல்வது என்று புரியாமல் பாக்கியா- ராதிகா இருவரும் அமைதியாக இருக்கிறார்கள். கோபிக்கு ஒன்னுமே புரியவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement