விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபிக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்கிறார் ஈஸ்வரி. பின் ஈஸ்வரி, இனியா, கோபி, செழியன் ஆகிய நான்கு பேரும் கலகலப்பாக சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோபி, தான் செய்த தவறை உணர்ந்து தன்னுடைய அம்மாவிடம் மன்னிப்பு கேட்டார். அதற்கு ஈஸ்வரி, ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். பின் பாக்கியா பம்பரமாக வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து கோபி ஆச்சரியப்பட்டு தன்னுடைய அம்மாவிடம் கேட்க, அவருமே பாக்கியாவை புகழ்ந்து பேசி இருந்தார்.
மேலும், கோபியை பார்க்க வந்த ராதிகாவை உள்ளே விடாமல் ஈஸ்வரி தடுத்தார். உடனே பாக்யா, ஈஸ்வரி கையைப் பிடித்துக் கொண்டு, நீங்கள் உள்ளே போங்க என்று ராதிகாவை அனுப்பி வைத்தார். ஆனால், கோபி தூங்கிக் கொண்டிருந்ததால் ராதிகா எதுவும் பேசாமல் கிளம்பி விட்டார். அதற்குப்பின் தூங்கி எழுந்த கோபி தண்ணி கேட்டார். உடனே பாக்கியா- கோபியை சேர்த்து வைப்பதற்காக தேவையில்லாத வேலைகளை ஈஸ்வரி செய்தார். இதை கவனித்த செல்வி பாக்யாவிடம் சொல்ல, அவர் கோபப்பட்டு பேசி இருந்தார்.
பாக்கியலட்சுமி:
அதோடு கோபியை விழுந்து விழுந்து ஈஸ்வரி கவனித்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து ஜெனிக்கு பயங்கர கோபம் வந்தது. இன்னொரு பக்கம் ராதிகா, கோபி போன் பண்ணுவார் என்று எதிர்பார்த்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். ஆனால், அவர் போன் செய்யவில்லை. அதன் பின் தனக்கு கிடைத்த ஆர்டரை பற்றி பாக்கியா வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது புது மெனு கார்டு வந்ததால் என்ன செய்வது என்று புரியாமல் புலம்பி இருந்தார். உடனே கோபி, அதற்கான ஒரு செஃப்பை வைத்து சமைத்துக் கொள்ளலாம் என்றவுடன் பாக்யா அமைதியாக இருந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோடில் கோபி பாக்கியாவின் புதிய ஆர்டருக்கு சில ஐடியாக்களை கோபி சொன்னார். இதை கேட்டு எல்லோருமே பாராட்ட, பாக்கியா மட்டும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். பின் எல்லோரும் தூங்கிய பிறகும் பாக்யா வேலை செய்து கொண்டிருந்தார். அதை பார்த்த கோபி வருத்தப்பட்டு அவரிடம் பேசி இருந்தார். ஆனால், பாக்யா, அதை பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். பின் பார்க்கில் பாக்கியாவிடம் கோபி தனியாக பேச முயற்சித்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோபி, உனக்குள் நிறைய திறமைகள் இருக்கு. ஒருவேளை நான் உன்னை சரியாக புரிந்து இருந்தால் நம்ம ரெண்டு பேரும் பிரிந்து இருக்கவே மாட்டோம் நன்றாக பார்த்துக் கொண்டிருப்பேன் என்று சொல்கிறார். இதை எல்லாம் அங்கு வந்த ராதிகா கேட்டு ரொம்ப வருத்தப்பட்டு கிளம்பி விடுகிறார். உடனே கோபத்தில் பாக்யா, நீங்கள் என் வாழ்க்கையில் இருந்து போன பிறகு தான் நான் நிம்மதியாக இருக்கிறேன் என்று திட்டி விட்டு கிளம்பி விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் ராதிகா, பார்க்கில் நடந்ததை தன்னுடைய அம்மாவிடம் சொல்லி வருத்தப்பட, அவர் ஆறுதல் சொல்கிறார். இன்னொரு பக்கம் கோபி- ஈஸ்வரி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஈஸ்வரி, பாக்கியாவிற்கு தெரியாமல் சாப்பாடை கொண்டு வந்து தருகிறார். இருந்தாலுமே, பாக்கியா கண்டுபிடித்து விடுகிறார். அந்த சமயம் பார்த்து ராதிகா வீட்டிற்கு வருகிறார். அவரை பார்த்தவுடன் ஈஸ்வரி திட்டுகிறார். பின் ஈஸ்வரியை தடுத்து நிறுத்தி கோபியை பார்க்க ராதிகாவை அனுப்பி வைக்கிறார் பாக்கியா. இத்துடன் சீரியல் முடிகிறது.