கடைசி தருணத்தில் மனம் விட்டு பேசிய ராமமூர்த்தி, சந்தோஷத்தில் மொத்த குடும்பம்- விறுவிறுப்பில் பாக்கியலட்சுமி

0
338
- Advertisement -

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஜெனி கர்ப்பமாக இருந்ததால் ஈஸ்வரி, அமிர்தாவை மோசமாக திட்டி இருந்தார். இதனால் எழில் கோபப்பட்டு ஈஸ்வரியிடம் பேச, இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. கடைசியில் எழில் வீட்டை விட்டு வெளியே போனார். இந்த விஷயத்தை அறிந்த கோபி, எழில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்று இருந்தார். ஆனால், எழில் முகம் கொடுத்து கூட பேசவில்லை. கடந்த வாரம் வீட்டில் தாத்தாவின் 80 ஆவது நாள் பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

அப்போது ஈஸ்வரி, தாத்தாவின் பிறந்தநாளுக்கு வரவேண்டும் என்று எழிலை கூப்பிட்டார். ஆனால், எழில் வர மறுத்தார். இதனால் ஈஸ்வரி வருத்தப்பட்டு இருந்தார். பின் ராமமூர்த்தியின் 80 ஆவது பிறந்தநாளை கொண்டாட எல்லோருமே கோவிலுக்கு போய் இருந்தார்கள். இதை வெளியில் இருந்து பார்த்த கோபி, என்ன வீட்டில் விசேஷம்? என்று குழப்பத்தில் செழியனுக்கு கால் செய்தார். செழியன் போன் எடுக்கவே இல்லை. கோவிலில் தடபுடலாக தாத்தாவின் பிறந்த நாள் நடந்தது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

தாத்தாவின் பிறந்தநாளுக்கு உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் வந்து இருந்தார்கள். பின் தாத்தா- பாட்டி இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் போது எழில் வந்து நின்றார். இதை பார்த்தவுடன் மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டது. இன்னொரு பக்கம் கோபி, செழியனுக்கு கால் பண்ணி எல்லா விஷயத்தையும் தெரிந்து கொண்டார். இதை கோபி, ராதிகாவிடம் சொல்ல இருவருக்கும் சண்டை வந்தது. கடைசியில் கோபி கோவிலுக்கு சென்றார். கோபியை பார்த்தவுடன் மொத்த பேருமே அதிர்ச்சியாக, ராமமூர்த்தி கோபப்பட்டு பேசி இருந்தார்.

சீரியல் கதை:

பின் ஈஸ்வரி- ராமமூர்த்தி எவ்வளவு திட்டியும், அசிங்கப்படுத்தியும் கோபி கிளம்பாமல் அங்கே இருந்தார். அதன் பின் எல்லோருமே ஈஸ்வரி- ராமமூர்த்தி இடம் ஆசிர்வாதம் வாங்கி இருந்தார்கள். கடைசியில் கோபி ஆசிர்வாதம் வாங்க வந்தவுடன் ராமமூர்த்தி திட்டி ஆசீர்வாதம் பண்ணாமல் விட்டார். இருந்தாலும், கோபி கிஃப்ட் கொடுத்ததற்கு, ராமமூர்த்தி தூக்கி வீசிவிட்டு சென்று விட்டார். அதற்கு பின் கோபி, தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க, ஈஸ்வரி கோபமாக திட்டி இருந்தார். பின் எல்லோருமே உட்கார்ந்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

அப்போது பாக்கியவை பார்த்து கோபி, என் குடும்பம் என்னை விட்டு பிரிந்து இருக்கிறது. அதற்கு காரணம் நீ தான் என்று வழக்கம் போல் பழி போட, பாக்கியா பதிலுக்கு பதில் பேசி இருந்தார். இன்றைய எபிசோடில், எழில்-அமிர்த இருவருமே கிளம்புகிறோம் என்று சொன்னவுடன் எல்லோருமே வருத்தப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் கோபி, குடித்துவிட்டு வந்து ராதிகாவிடம் கோவில் நடந்ததை சொல்லி புலம்ப, ராதிகாவிற்கு கோபம் வந்து கத்துகிறார். உடனே கோபி, எல்லோரும் என்னை விட்டு போய் விட்டார்கள். நீயும் போகாதே என்று சொல்ல, ராதிகா மனம் மாறி அவருக்கு ஆறுதலாக பேசுகிறார்.

இன்றைய எபிசோட்:

பின் பாக்கியா வீட்டில் எல்லோரும் சந்தோசமாக பேசி இருக்கிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில், ஈஸ்வரி, நேரம் ஆகிவிட்டது எல்லோரும் போய் தூங்குங்கள் என்று சொன்னவுடன் ராமமூர்த்தி, நான் பேசணும். மனசுக்கு நிறைவாக இருக்கிறது என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். நாளைக்கு என்ன பேச மாட்டீர்களா? இன்றோடு பேசி முடிக்க போகிறீர்களா? என்று கிண்டலாகவும் ஈஸ்வரி பேசுகிறார். கடைசியில் பாக்கியாவிடம் மனது விட்டு ராமமூர்த்தி சந்தோசமாக பேசுகிறார். அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைக்கிறார். இன்னொரு பக்கம் அமிர்தா, பேக்கில் பணம் இருக்கிறது. அதை பார்த்தவுடன் அம்மா தான் கொடுத்திருப்பார் என்று சொன்னவுடன் எழில் திருப்பி கொடுக்கலாம் என்று சொல்கிறார். உடனே அமிர்தா, இதை கொடுத்து அம்மாவை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று சொல்ல சீரியல் முடிகிறது.

Advertisement