விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ஈஸ்வரி, நான் இந்த வீட்டிலேயே இல்லை. என் மகனுடன் கிளம்புகிறேன் என்று சொன்னார். அதற்கு பாக்கியா, தாராளமாக கிளம்புங்கள். போகும்போது மாத்திரை எடுத்துக் கொண்டு போங்கள் என்று சொன்னவுடன் ஈஸ்வரிக்கு ஒரே ஷாக். கோபி-ஈஸ்வரி இருவருமே வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்கள். இனியாவுமே தன் தந்தையை தடுக்கவே இல்லை. சில மாதங்களுக்கு பிறகு இனியாவிற்கு ரிப்போர்ட்டர் வேலை கிடைத்தது. பின் இந்த விஷயத்தை தன்னுடைய அப்பா, பாட்டியிடம் சொல்ல இனியா வீட்டிற்கு போனார். கோபி ரொம்ப சந்தோஷப்பட்டார்.

இனியா, முதல் நாள் வேலைக்கு கிளம்புவதற்கு தயாராகி சென்றார். வீட்டில் உள்ள எல்லோருமே அவருக்கு வாழ்த்துக்கள் சொன்னார்கள். பாக்கியா, தன்னுடைய மகளை நினைத்து ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் தன்னுடைய மாமியாரை சந்தித்த பாக்கியா, நீங்கள் நம் வீட்டிற்கு வந்து விடுங்கள். ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு ஈஸ்வரி, என் மகனை தனியாக்கி விட்டீர்கள். நான் அவனை விட்டு வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். எதுவுமே பேச முடியவில்லை பாக்கியா கிளம்பி வந்து விட்டார். அதற்கு பின் டிவியில் இனியா செய்தி வாசிப்பதை பார்த்து எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள்.
பாக்கியலட்சுமி:
அதற்குப்பின் யூபிஎஸ்சி தேர்வில் ஆகாஷ் பெயில் ஆகி விடுவதாக தகவல் வந்தது. இதை கேட்டவுடன் ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்பட்டார். அதோடு இனியாவுக்கு எப்படியாவது கல்யாணம் செய்து வைத்து விடணும் என்று சொன்னார். இன்னொரு பக்கம் இனியா, பாக்கியா வருத்தப்பட்டார்கள். செல்வி, என் மகன் ரொம்ப கஷ்டப்பட்டான். ஆனால், இப்படி நடந்திருக்கக்கூடாது என்று வருத்தமாக பாக்யாவிடம் புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து ரெஸ்டாரண்டுக்கு நாலு பேர் வந்தார்கள். அவர்கள், இந்த ஓட்டலை எங்க ஓனர் சுதாகர் விலைக்கு வாங்கப் போகிறார். இதை விற்கப் போகிறீர்களா? என்று கேட்க, பாக்கியா ஷாக் ஆகி அவர்களிடம் சண்டைக்கு போனார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் பிஸ்னஸ் மேன் சுதாகர் உதவியாளர்கள், இந்த ரெஸ்டாரன்ட் விலைக்கு வேண்டும் என்று கேட்க, பாக்கியா ஒத்துக் கொள்ளவில்லை. இதை அவர்கள், சுதாகர் இடம் சொன்னார்கள். உடனே அவர், கோபப்பட்டு எப்படியாவது அந்த இடத்தை வாங்குங்கள். எனக்கு அந்த ரெஸ்டாரண்ட் வேண்டும் என்று சொன்னார். மறுபடியும் பாக்கியாவிடம் ரெஸ்டாரண்டை விலைக்கு வாங்க பேசி இருந்தார்கள். ஆனால், பாக்கியாவும் எழிலும் திட்டி அனுப்பி விட்டார்கள். இன்னொரு பக்கம் செழியன், கோபி, ஈஸ்வரி மூவருமே இனியாவிற்கு திருமணம் செய்வதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

சீரியல் ட்ராக்:
பின் வீட்டில் பாக்கியா சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த சுதாகர், ரெஸ்டாரண்டை விலைக்கு வாங்குவதை பற்றி மீண்டும் பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட பாக்யா, அது என் உழைப்பில் வந்தது. யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று ஆக்ரோஷமாக பேசி இருந்தார். இருந்தாலுமே விடாமல் சுதாகர் பேசி இருந்தார். ஓரு கட்டத்தில் பாக்கியா, வீட்டை விட்டு வெளியே போங்கள். இல்லை என்றால் போலீசை கூப்பிடுவேன் என்று மிரட்டி இருந்தார். அவரால் எதுவுமே பேச முடியவில்லை வந்து விட்டார். அதற்குப்பின் சுதாகர், பாக்யாவின் குடும்பத்தை பற்றி விசாரிக்க சொன்னார். அப்போது கோபி- பாக்கியா பிரிந்து இருப்பதையும், அவருடைய மகள் ரிப்போர்ட்டாக இருப்பதையும் சுதாகர் தெரிந்து கொண்டார்.
https://www.youtube.com/watch?v=kCKce-2HybE
சீரியல் ப்ரோமோ:
இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தொழிலதிபர் சுதாகரின் கம்பெனியில் கோபியின் நண்பர் செந்தில் வேலை செய்கிறார். அவரை வைத்து கோபியை வீட்டிற்கு வர வைக்கிறார். பின் சுதாகர், உங்களுடைய மகள் இனியாவை எங்கள் வீட்டு மருமகளாக்க விரும்புகிறேன் என்று சொன்னவுடன் கோபி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இதைப்பற்றி ஈஸ்வரி- கோபி இருவருமே பாக்யாவிடம் சொல்கிறார்கள். அதற்கு பாக்கியா, இனியா ஒத்துக்கொள்ள மாட்டார் என்று சொன்னவுடன் ஈஸ்வரி, இந்த கல்யாணம் நடக்கும். யார் விருப்பமும் தேவை இல்லை. கல்யாணம் நடந்தே தீரும் என்று என்று சொல்கிறார்.






