விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியலில் இனியா, என்னை பிடித்து போய் நிதிஷ் திருமணம் செய்யவில்லை. சுதாகருக்கு அம்மாவின் ரெஸ்டாரண்டை எப்படியாவது வாங்க வேண்டும். அதேபோல் போதைக்கு அடிமையான தன் மகனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் என்னை பெண் கேட்டு வந்தார்கள் என்று எமோஷனலாக கதறி அழுதார். இதைக் கேட்டவுடன் பாக்கியாவுக்கு ஆத்திரம் தாங்கவே முடியவில்லை. அவள் காதலித்தால் என்பதற்காக இப்படி எதையும் விசாரிக்காமல் திருமணத்தை பண்ணி வைத்து என் மகள் வாழ்க்கையை வீணடித்து விட்டீர்களே என்று ஈஸ்வரி, கோபியை பார்த்து கேட்டார். கோபி, என் மீது தான் தவறு என்று அழுதார்.

பின் சுதாகர் வீட்டிற்கு சென்ற பாக்கியா, கோபி இருவரும் தன் மகளுக்கு நடந்த அநீதிக்காக நியாயம் கேட்டு பேசி இருந்தார்கள். ஆனால், சுதாகர் அவர் மனைவி இருவருமே அதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஏளனமாக பேசினார்கள். அதிலும் சுதாகரின் மனைவி, இனியாவின் நடத்தை பற்றி ரொம்ப கேவலமாக பேசினார். இதனால் பொங்கி எழுந்த பாக்கியா, என் மகளின் நடத்தியை பற்றி குறை சொல்ல யாருக்கும் எந்த அருகதையும் இல்லை. பொறுக்கியை பெற்று வைத்துவிட்டு பேசுகிறீர்களா? என்று சுதாகரையும் அவருடைய மனைவியையும் வெளுத்து வாங்கி இருந்தார். கோபியுமே பாக்கியா பேசுவது சரி என்பது போல அவருக்கு சப்போர்ட் செய்தார். கடைசியில் பாக்கியா, எல்லாத்திற்கும் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகணும். இனி உங்களை சும்மா விட மாட்டேன் என்று சவால் விட்டார்.
பாக்கியலட்சுமி:
வீட்டிற்கு வந்த பாக்கியா, கோபியிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். அப்போது கோபி, நான் தான் ஒழுங்காக விசாரிக்காமல் இனியாவை கல்யாணம் செய்து கொடுத்துவிட்டேன். அவர்கள் முன்பு பேசினது ஒரு மாதிரியாக இருக்கு இப்போ வேற மாதிரி பேசி இருந்தார்கள். அவருடைய சுயரூபமே இப்போ வெளியே வந்தது. நான் அவர்களை சும்மா விட போவதில்லை என்று கத்தினார். பின் பாக்கியா, என் மகள் இங்கேயே இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதற்கு இனியா, நான் நிதிஷ் உடன் கொஞ்ச நாள் கூட சந்தோசமாக வாழவில்லை. அந்த வீட்டில் ஏதோ சிறையில் இருந்தது போல இருக்கிறது என்றார்.

கடந்த வாரம் எபிசோட்:
இன்னொரு பக்கம் சுதாகர், எப்படியாவது இனியாவை இந்த வீட்டிற்கு அழைத்து வரவேண்டும். இல்லை என்றால் தேவையில்லாமல் அவருடைய அப்பா, அம்மா நம் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பார்கள் என்று சொன்னார். ஆனால், நிதிஷின் அம்மாவிற்கு இனியாவை அழைத்து வருவதில் விருப்பமே இல்லை. இன்னொரு பக்கம் இனியா, பாக்கியா இருவருமே மனம் விட்டு ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்கள். மறுநாள் காலையில் கோபி, இனியா நன்றாக இருக்கிறாளா? என்று விசாரிக்கிறார். ஈஸ்வரி தன்னுடைய பேத்தியின் நிலைமையை நினைத்து வேதனையில் இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் இனியா, அம்மாவின் ரெஸ்டாரண்டை எப்படியாவது சுதாகரிடம் இருந்து வாங்க வேண்டும் என்றெல்லாம் பேசுகிறார். இதையெல்லாம் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே இனியாவுக்கு சப்போர்ட் செய்கிறார்கள். அதற்குப் பின் இனியா வேலைக்கு தயாராகிக் கிளம்புகிறார். அப்போது பாக்கியா வீட்டிற்கு சுதாகரும் அவருடைய மனைவியும் வருகிறார்கள். அவர்களை பார்த்தவுடன் பாக்கியா குடும்பத்தில் உள்ள எல்லோருமே கோபப்படுகிறார்கள். சுதாகர், நான் இனியாவை அழைத்து செல்ல வந்தேன் என்று சொல்கிறார். இதனால் கோபப்பட்ட கோபி, அதெல்லாம் முடியாது.

சீரியல் ட்ராக்:
பொய் சொல்லி எங்களை ஏமாற்றி விட்டீர்கள். இனிமேல் இனியா அங்கு வர வாய்ப்பில்லை என்று கோபப்பட்டு பேசுகிறார்கள். சுதாகர் பாக்கியா குடும்பத்திற்கு இடையே வாக்குவாதம் அதிகமாகின்றது. கடைசியில் இனியாவை அனுப்ப முடியாது என்பதால் சுதாகரால் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து சென்று வருகிறார். அதற்குப்பின் நிதிசை சுதாகர் வெளியே எடுத்து விடுகிறார். அப்போது சுதாகர், நீ எப்படியாவது இனியாவை இந்த வீட்டிற்கு அழைத்து வரவேண்டும். இல்லையென்றால் நமக்கு தான் பிரச்சனை என்பதால் நிதிஷ் இனியாவை தேடி ஆபீஸ்க்கு போகிறார். ஆனால், இனியா, நிதிஷை சந்திக்க விருப்பம் இல்லை என்று சொல்லிவிடுகிறார். இதனால் நிதிஷ் ஆபீஸில் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






