மயங்கி விழும் ஈஸ்வரி, ராதிகா மீது ஆத்திரத்தில் கோபி – கலகலப்பான மாமியார்,மருமகள் சண்டையில் பாக்கியலட்சுமி

0
293
- Advertisement -

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை அடுத்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாக்கியாவை அவர் கணவர் கோபி விவாகரத்து செய்து ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார்.

-விளம்பரம்-

விவகாரத்திற்கு பின் பாக்கியா கேண்டீன், சமையல், கல்லூரி என்று பிசியாக சுற்றி கொண்டிருக்கிறார். பின் கோபியும் பாக்கியாவிற்கு போட்டியாக ரெஸ்ட்ராண்ட் திறக்கிறார். மேலும், கடந்த வாரம் எபிசோடில் பழனிசாமிக்கு பாக்யா மீது காதல் ஏற்படுகிறது. இன்னொரு பக்கம் ராதிகா கர்ப்பமாக இருப்பதாக புதிய ட்ராக்கை ஆரம்பித்து இருக்கின்றனர். கோபிக்கு பேரன், பேத்தி இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் தந்தையாகி இருக்கிறார் கோபி. ஆனால், இதை வீட்டில் சொல்ல கோபி தயங்குகிறார்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

இந்த உண்மையை பாக்யா கண்டுபிடித்து ராதிகாவிற்கு வாழ்த்துக்கள் சொல்கிறார். மேலும், வீட்டில் எல்லோரிடம் இந்த உண்மையை சொல்லியே தீர வேண்டும் என்று ராதிகா சொல்கிறார். ஒரு வழியாக இந்த உண்மை எல்லோருக்கும் தெரிந்து அதிர்ச்சி ஆகிறார்கள். பின் செழியன்- எழில் இருவருமே சேர்ந்து கோபியை வீட்டை விட்டு அனுப்புகிறார்கள். கோபி, ஈஸ்வரியை தன்னோடு அழைத்து கொண்டு சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

தற்போது சீரியலில் ஈஸ்வரி, ராதிகா அம்மா இடையே கலவரங்கள் சென்று கொண்டிருக்கின்றது. ஈஸ்வரி வந்தது ராதிகா அம்மாவிற்கு பிடிக்கவில்லை. ராதிகா வீட்டிற்கு சென்றவுடன் ஈஸ்வரி தன்னுடைய வேலையை ஆரம்பித்து விட்டார். வேணும் என்றே ராதிகா, அவருடைய அம்மாவை வம்பிழுப்பது கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி வேணும் என்று மயக்கம் போட்டு விழுந்து டிராமா செய்கிறார்.

-விளம்பரம்-

ஈஸ்வரி-ராதிகா சண்டை:

இதை பார்த்து கோபி பதறி போய் ராதிகா, அவருடைய அம்மாவையும் திட்டுகிறார். பின் கோபி கிளம்பி சென்றவுடன் ஈஸ்வரி சிரிக்கிறார். ராதிகாவிற்காக சாப்பிட வைத்த ஆப்பிளை எடுத்து ஈஸ்வரி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து ராதிகாவுக்கு எரிச்சல் ஏற்படுகிறது. பின் ராதிகா அதை பிடுங்கி கொள்கிறார். இது ஒரு சாக்கு என்று கோபியிடம் ஈஸ்வரி சொல்கிறார். இதனால் கோபமடைந்த கோபி ராதிகாவை பயங்கரமாக திட்டுகிறார்.

இன்றைய எபிசோட்:

மேலும், ராதிகாவும் அவருடைய அம்மாவும் பயங்கரமான ஆக்ரோஷத்தில் இருக்கிறார்கள். எப்படியாவது ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். இன்னொரு பக்கம் எழிலுக்கு படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கிறது. இதை வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்படுகிறார். இனிவரும் நாட்களில் ஈஸ்வரியை ராதிகா வெளியே அனுப்புவாரா? ஈஸ்வரி- ராதிகா இடையே என்னென்ன பிரச்சினை வரப்போகிறது? இதை கோபி எப்படி சமாளிப்பார்? போன்ற கலகலப்பான கட்டங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement