MLAவுடன் திருமணம் நடந்ததா? வெளிப்படையாக சொன்ன நடிகை ரேகா நாயர்

0
534
- Advertisement -

எம்எல்ஏவை சின்னத்திரை நடிகை ரேகா நாயர் திருமணம் செய்து கொண்டார் என்ற சர்ச்சை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பல நடிகைகள் திரைத்துறையில் என்ன நடக்கிறது என்பதை பற்றி மிகவும் வெளிப்படையாக பேசுவார்கள். அந்த வகையில் ஓபனாக பேசும் நடிகை தான் ரேகா நாயர். இவர் பல ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து வந்த நிலையில் பெரிதாக அவர்க்கு வாய்ப்புகள் அமையவில்லை.

-விளம்பரம்-

கிடைக்கும் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால், இவருக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தான் இரவின் நிழல் படம் வந்தது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கும் பார்த்திபனின் இயக்கத்தில் வெளியான படம் இரவின் நிழல். இந்த படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக ரேகா நடித்திருப்பார். இது பெரிய சர்ச்சையாக மாறியிருந்தது.

- Advertisement -

ரேகா நாயர் திரைப்பயணம்:

குறிப்பாக திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தரக்குறைவாக பேசய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதற்கு பின் இருவருக்கும் வாக்குவாதம் பெரிய கலவரம் ஆகி இருந்தது. அது பெரிய அளவில் சோசியல் மீடியாவில் பேசப்பட்டது. இதை அடுத்து சோசியல் மீடியாவில் ரேகா பல பேட்டிகளில் தன்னை குறித்து வெளிப்படையாக கூடியிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாகவே அரசியல் வட்டாரத்திலும் ரேகா பெயர் அடிபட்டு வருகின்றது.

ரேகா நாயர் குறித்த சர்ச்சை:

அதாவது சிட்டிங் எம்எல்ஏ ஒருத்தரோடு ரேகா நாயர் சுற்றிக் கொண்டு இருப்பதாகவும், அவருடன் எல்லா இடத்திலும் இவரை பார்க்க முடிகிறது என்றும் கூறுகிறார்கள். அதோடு கட்சிக்காரர் விழாக்களுக்கு கூட அவரையும் அழைத்து செல்கிறார் எம்எல்ஏ. இது குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் ரேகா இருக்கிறார். அதோடு இவர் தனக்கு தெரிந்தவர்களிடம் மட்டும் எம்எல்ஏ வை திருமணம் செய்து கொண்டேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

எம்எல்ஏ நெருக்கமானவர்கள் சொன்னது:

இந்த நிலையில் இது குறித்து எம் எல் ஏ நெருக்கமானவர்கள் சொன்னது, ஏற்கனவே எம்எல்ஏ திருமணமானவர். எம்எல்ஏ என்ற முறையில் நடிகைகள் அவருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு. ஒரு எம்எல்ஏவுக்கு இருக்கிற பிசியான நேரத்தில் நடிகையுடன் அதிக நேரத்தை செலவழிக்கிறார் என்றெல்லாம் சொல்வது நன்றாக இல்லை. இந்த செய்தி தலைமைக்கும் சென்றிருக்கிறது. தலைமையில் கூப்பிட்டு விசாரித்தார்களா என்று தெரியவில்லை? இந்த பஞ்சாயத்து எப்ப பெருசாகும் என்று தெரியவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.

ரேகா அளித்த பேட்டி:

இது குறித்து ரேகா நாயர் சொன்னது, அந்த எம்எல்ஏ உடைய அப்பாவும் நானும் ஒண்ணா மாறத்தான் ஓடுவோம். ஒரே ஏரியாவில் குடியிருக்கிறோம். காலையில் வாக்கிங் போகும்போது தான் எனக்கு அவரிடம் அறிமுகம் ஏற்பட்டது. அவர் மூலமாக அவருடைய குடும்பத்தின் நட்பு கிடைத்தது. எனக்கு பல எம்எல்ஏக்கள், அமைச்சர்களை தெரியும். நீங்கள் சொல்ற அந்த எம்எல்ஏவுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சா? என்ற கேள்விக்கு பதில் வேணும்னா நீங்க அவர்கிட்டயே போய் கேளுங்க என்று கூறியிருக்கிறார்.

Advertisement