இது படமா இல்ல யூடுயூப் வீடியோவா ? பிளாக் ஷீப் குழுவின் ‘பாபா பாபா பிளாக் ஷீப்’ விமர்சனம் இதோ.

0
1799
BabaBaba
- Advertisement -

இயக்குனர் ராஜ்மோகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பாபா பிளாக் ஷீப். இந்த படத்தில் அம்மு அபிராமி, போஸ் வெங்கட், அபிராமி, வினோதினி,ஜி பி முத்து, ஆர்ஜே விக்னேஷ்காந்த், அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், அதிர்ச்சி அருண், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் பாபா பிளாக் ஷீப் படம் ரசிகர்கள் பதில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் சேலம் மாவட்டத்தில் ஆண்கள் பள்ளி ஒன்று நடத்தப்படுகிறது. இன்னொரு பக்கம் ஆண்- பெண் இருபாலர் இருக்கும் பள்ளியும் நடத்தப்படுகிறது. பின் நிர்வாக பிரச்சனை காரணமாக இந்த இரு பள்ளிகளையும் ஒன்றிணைக்கிறார்கள். ஏற்கனவே இந்த இரு பள்ளி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இப்போது இரண்டு பள்ளிகள் ஒன்றாக இணைந்தவுடன் சும்மாவா இருப்பார்கள். இரண்டு கேங்க் மாணவர்களும் இடையே பிரச்சனை தொடர்கிறது.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இரண்டு கேங்க் மாணவர்களும் ஒரே வகுப்பில் படிக்கிற சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் இன்னும் அதிகமாகவே இரு கேங்க் மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுகிறது. இவர்கள் இருவருக்கும் பொதுவான தோழியாக அம்மு அபிராமி இருக்கிறார். இதில் கடைசி bench யாருக்கு என்ற சண்டை ஏற்படுகிறது. பின் பரிட்சையில் யார் கடைசி மார்க்? அறிவியல் கண்காட்சி, வினோத போட்டி என பல ரகளைகள் நடக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் எழுதிய தற்கொலை கடிதம் அம்மு அபிராமிக்கு கிடைக்கிறது.

இதனால் பிரிந்து கிடக்கும் மாணவர்களை ஒன்று திரட்டி அந்த கடிதம் எழுதிய மாணவரை கண்டுபிடிக்க போராடுகிறார்கள். இறுதியில் அந்த மாணவர் யார்? அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? இதற்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் சம்பந்தம் இருக்கா? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் பள்ளி மாணவர்களாக ஆர்ஜே விக்னேஷ்காந்த், அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், அதிர்ச்சி அருண், விவேக் போன்று யூட்யூபில் பிரபலமான நபர்களே முக்கியமான கதாபாத்திரங்களாக இயக்குனர் நடிக்க வைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் இவர்களுடைய காமெடி, நையாண்டி பேச்சுகள், வசனம் எல்லாம் ரசிக்கும் வகையில் இருக்கிறது. ஆனால், காதல், செண்டிமெண்ட் காட்சிகளில் தான் இவர்கள் நடிப்பு இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். அதோடு இவர்களுடைய சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் படத்திற்கு ஒட்டவே இல்லை. சொல்லப்போனால், இவர்களுடைய நடிப்பு படத்தை காப்பாற்றவில்லை என்று தான் சொல்லணும். படத்தில் பள்ளி மாணவியாக அம்மு அபிராமி வருகிறார். இவருக்கு பெரிதான கதாபாத்திரம் எதுவும் இல்லை.

இவர்களை எடுத்து போஸ் வெங்கட், வினோதினி, அபிராமி போன்ற பல அனுபவ நடிகர்கள் வருகிறார்கள். இவர்கள் ஆரம்பத்தில் இருந்து வராமல் இடையில் தான் வருகிறார்கள். இதனால் இவர்களுக்கும் கதைக்கும் பெரிதான கனெக்ட் எதுவும் இல்லை. அதுமட்டுமில்லாமல் காமெடிக்காக வரும் மதுரை முத்து, சுரேஷ் சக்கரவர்த்தி, ஜி பி முத்து அவர்கள் உடைய கதாபாத்திரமும் பெரிதாக பேசப்படவில்லை. ஒரு கோர்வையாக இல்லாமல் ஆங்காங்கே காட்சிகளை தொகுத்து கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஆனால், இதை படமாக மாற்ற ஒளிப்பதிவாளர் கடுமையாக போராடி இருக்கிறார்.

சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பாடல்களும் இல்லை. தீம் இசையையே மீண்டும் மீண்டும் படத்தில் உபயோகித்து இருக்கிறார்கள். பள்ளியில் இருக்கும் கேங் வார், ரவுடி லீடர், அப்பாவி நண்பன், கேங் லீடர், ஆசிரியர்கள், தேர்வுகள், நிகழ்ச்சிகளில் மாணவர்கள் செய்யும் சேட்டைகள் என வழக்கமான காட்சியை தான் படத்திலும் காண்பித்திருக்கிறார். இவரும் அரைத்த மாவை தான் அரைத்திருக்கிறார் தவிர சொல்லிக் கொள்ளும்படி இல்லை. தற்போது விஜய் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி இருக்கும் கனா காணும் காலங்கள் 2 சீரியல் கூட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

ஆனால், அதைவிட அறுந்த பலசாக இந்த படத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். காமெடி படம் என்று சொல்லி பார்க்கும் அளவிற்கு காமெடிகளும், கதைகளும் இருக்கிறது. முதல் பாதியாவது சுமாராக இருக்கிறது. இரண்டாவது பாதி ஒன்றுமே இல்லை. படம் முழுவதும் வெறும் வசனங்களால் தான் நிரம்பி இருக்கிறது. தற்போது வளர்ந்து வந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பள்ளி கதையா? என்று சோதிக்கும் அளவிற்கு இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார்.

நிறை:

பள்ளி மாணவர்களின் கதை

ஒளிப்பதிவு சுமார்

மாணவர்களின் டயலாக், உடல் மொழி, காமெடி ஓகே

மற்றபடி பெரிதாக படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை

குறை:

இயக்குனர் கதைக்களத்தில் இன்னும் நிறையவே கவனம் செலுத்தி இருக்க வேண்டும்

அரைத்த மாவை தான் அரைத்து இருக்கிறார்

பார்வையாளர்களை ரொம்பவே சோதித்து இருக்கிறார் என்று சொல்லலாம்

இசை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை

கதைக்கும் நடிகர்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது

சென்டிமென்ட், காதல் காட்சிகள் எல்லாம் படத்திற்கு செட் ஆகவில்லை

இயக்குனர் நிறைய ஒர்க் அவுட் செய்திருக்க வேண்டும்

மொத்தத்தில் பாபா பிளாக் ஷீப்- பிளாப்

Advertisement