ஹாட்ரிக் வெற்றியை பெற்றாரா கவின்? ‘ஸ்டார்’ படத்தின் முழு விமர்சனம் இதோ.

0
402
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஸ்டார். இந்த படத்தில் அதிதி போங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை இயக்குனர் இளன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் ஸ்டார் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் கலையரசன் என்ற கதாபாத்திரத்தில் கவீன் நடித்திருக்கிறார். இவருடைய அப்பாவாக லால், கவின் அம்மா கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்திருக்கிறார்கள். இவர் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு சிறுவயதில் இருந்து சினிமாவின் மீது தீராத காதல். எப்படியாவது சினிமாவில் பெரிய ஸ்டார் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இவருக்கு உறுதுணையாக அவருடைய தந்தையும் இருக்கிறார்.

- Advertisement -

அதோடு சினிமாவில் எந்த அளவிற்கு உயரம் போக முடியுமோ அந்த அளவிற்கு கீழேயும் தள்ளிவிடும். இதனால் கவினுக்கு சாதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பின் போது கவின் சந்தித்த விபத்து என்ன? அந்த விபத்திலிருந்து கவின் மீண்டு வந்து நடிகன் ஆனாரா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் கவின் பள்ளி, கல்லூரி, இளைஞர், அலுவலகத்தில் வேலை செய்யும் நபராக என பல கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

இவரை அடுத்து தந்தை ரோலில் லால் நடிப்பு மிரட்டல் ஆக இருக்கிறது. அதேபோல் படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சினிமா என்பது எந்த அளவிற்கு உயரத்திற்கு கொண்டு செல்லுமோ அதே அளவிற்கு கீழேயும் தள்ளும் என்பதை இயக்குனர் சிறப்பாக காண்பித்து இருக்கிறார். சொல்லப்போனால் தன்னுடைய சொந்த அனுபவத்தை காண்பித்திருக்கிறார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

90 காலம் பட்டம் தொடங்கி தற்போது இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்ப பொருள், ஆடை அலங்காரத்தை, முகபாவனைகளை இயக்குனர் காண்பித்து இருப்பது நன்றாக இருக்கிறது. கல்லூரி காலங்களுக்கு ஏற்ப காதல், பிரிவு அனைத்தையும் இயக்குனர் காண்பித்து இருக்கிறார். படத்தில் சில வசனங்கள் நன்றாக இருந்தாலும் சில வசனங்கள் உணர்வுபூர்வமாக இல்லை. ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள். கிளைமாக்ஸ் டெஸ்ட் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக ஸ்டார் இருக்கிறது.

நிறை:

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்

கதைக்களம் நன்றாக இருக்கிறது

சில வசனங்கள் சிறப்பாக இருக்கிறது

ஒளிப்பதிவு பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

கிளைமாக்ஸ் டிவிஸ்ட் சிறப்பு

குறை

சில காட்சிகளில் வசனங்களை உயிர்ப்புடன் கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

சில காட்சிகளை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்

மொத்தத்தில் ஸ்டார் – மின்மினி பூச்சி போல் மிளிர்கிறது.

Advertisement