அமீர் நாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ படம் எப்படி இருக்கு – முழு விமர்சனம் இதோ.

0
297
Ameer
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் அமீர். தற்போது அமீர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் உயிர் தமிழுக்கு. இந்த படத்தை ஆதம்பாவா இயக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவே இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் சாந்தினி ஸ்ரீதரன், இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், ஆனந்த்ராஜ், சரவணன் சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு வித்தியாசகர் இசையமைத்திருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் சென்னையில் முற்போக்கு மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், முன்னாள் அமைச்சரும் ஆக இருப்பவர் ஆனந்தராஜ். இவரை ஒரு நாள் மர்ம நபர்கள் கொலை செய்து விடுகிறார்கள். இவருடைய மகள் தான் சாந்தினி. இவரை எதிர்க்கட்சியாளர் புரட்சிகர மக்கள் முன்னணி கழகத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர் அமிர் காதலிக்கிறார்.

- Advertisement -

இந்த கொலையை அமிர் தான் செய்தார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இதை அவருடைய காதலி சாந்தினியும் நம்பி விடுகிறார். இறுதியில் அமீர் தன் மீதான கொலை பழியில் இருந்து தப்பித்தாரா? சாந்தினி அமீரை புரிந்து கொண்டாரா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் அமீர் கேபிள் டிவி நடத்துகிறார். ஆனால், தன்னுடைய காதலிக்காக அரசியலுக்கு வருகிறார் அமீர். இதற்காக இவர் பொதுக்கூட்டம், நன்றி, அறிவிப்பு கூட்டம் என அனைத்து கூட்டத்தையும் நடத்துகிறார்.

ஹீரோயினி சாந்தினி நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம். இவர்களை அடுத்து படத்தில் வரும் ராஜ்கம்பூர், இமான் அண்ணாச்சி வசனங்களும் காமெடியும் நன்றாக இருக்கிறது. இந்த படத்தை கிட்ட ஐந்து வருடங்களாக எடுத்திருக்கிறார்கள். படத்தில் கதைக்களம் நன்றாக இருந்தாலும் அதை சுவாரசியத்துடன் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும்.

-விளம்பரம்-

நிறைய லாஜிக் மிஸ்டேக். குறிப்பாக வாக்கு எண்ணிக்கை காட்சிகள் எல்லாம் சரியாகவே இல்லை. படத்தில் ஒரே பிளஸ் என்றால் சமகால அரசியலை பகடி செய்திருப்பது, சமாதி முன் தியானம் மெரினா பீச்சில் அரசுடமையாக்கப்பட்ட தலைவர்கள் சமாதி. சில காட்சிகள் வசனங்கள் தான் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை ஓகே, இருந்தாலும் பாடல்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. மொத்தத்தில் படத்தை பொறுமையாக இருந்தால் ஒரு முறை சென்று பார்க்கலாம்.

நிறை:

சமகால அரசியல் குறித்த கதை

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்

பின்னணி இசை, ஒளிப்பதிவு ஓகே

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒன்றுமே இல்லை

குறை:

நிறைய லாஜிக் குறைபாடுகள்

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சில இடங்களில் வசனங்கள் நன்றாக இல்லை.

இரண்டாம் பாதி ரொம்ப பொறுமையாக செல்கிறது.

பொறுமை இருந்தால் மட்டுமே இந்த படத்தை பார்க்க முடியும்

மொத்தத்தில் உயிர் தமிழுக்கு – வெல்ல வாய்ப்பில்லை

Advertisement