சிறுவயது பாகுபலியாக நடித்த சிறுவனின் தற்போதைய புகைப்படம் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இந்திய சினிமாவில் எத்தனையோ பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த படம் பாகுபலி. பாகுபலி படத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. அந்த அளவிற்கு இந்த படம் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது கடந்த 2015 ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமாக பாகுபலி படம் வெளியாகி இருந்தது. இயக்குனர் ராஜமவுலி இந்த படத்தை இயக்கி இருந்தார். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் வெளியாகி இருந்தது.
அதுமட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக இருக்கிறது. இந்த படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், நாஸர், சுதீப், தம்மனா, அனுஸ்கா, சத்யராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு எம்எம் கீரவாணி இசை அமைத்திருந்தார். கே கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். பாகுபலியாக பிரபாஸ் கலக்கி இருக்கிறார். படத்தின் முதல் பாகத்தில் கட்டப்பா பாகுபலியை கொள்ளுவார்.
பாகுபலி படம் பற்றிய தகவல்:
அதற்கான காரணத்தை இரண்டாம் பாகத்தில் காண்பித்து இருப்பார்கள். இந்த படம் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். மேலும், முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றியை பெற்று வசூல் சாதனையை படைத்து இருந்தது.
பாகுபலி படத்தின் வெற்றி:
மேலும், விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என படத்திற்கு தேவையான அனைத்தையுமே கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்து இருந்தார் இயக்குனர். அதோடு பாகுபலி படம் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருந்தது. அதிலும் பாகுபலியின் வெற்றியை பார்த்து பாலிவுட்டே மிரண்டு இருந்தது என்றே சொல்லலாம்.
சிறுவயது பாகுபலி குறித்த தகவல்:
பாகுபலி படம் மூலம் பிரபாஸ் மட்டும் அல்ல அதில் நடித்த அனைவருமே நாடு முழுவதும் பிரபலமானவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் பாகுபலி படத்தில் சிறுவயது பாகுபலியாக நடித்த சிறுவன் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுஎன்னவென்றால், இந்த படத்தில் சிறுவயது பாகுபலி கதாபாத்திரத்தில் சிறுவன் ஒருவன் நடித்திருப்பார். இவருடைய பெயர் நிகில்தேவ்துலா. அவர் இளம் வயது பாகுபலியாக தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
வைரலாகும் புகைப்படம்:
இந்த நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் வியந்து விட்டார்கள். தற்போது நிகில்தேவ்துலா வளர்ந்து பெரிய ஆளாக ஆகி விட்டார். இதைப் பார்த்த ரசிகர்களும் இவர் தான் சிறுவயது பாகுபலியா! என்று வாயை பிளந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.