‘விவேக்கை போல இவர் பெயரிலும் சாலைக்கு இருக்க வேண்டும் – முதல்வருக்கு கோரிக்கை வைத்த திரௌபதி பட இயக்குனர் (யாருக்கு தெரியுமா ? )

0
388
mohan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். பின் தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிகராகவும் சில படங்களில் நடித்திருந்தார். இவர் ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல முன்னணி நடிகர்கள் முதல் தற்போதிருக்கும் இளம் நடிகர்கள் வரை என பல பேருடன் இணைந்து நடித்திருக்கிறார். இவர் சினிமாவை தாண்டி பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருக்கிறார். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இவர் சுற்றுச் சூழலிலும் அதிக ஆர்வம் கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-
Vivek Street Board Inauguration | விவேக்பெயரில் சாலை

அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டு இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காரணமாக பலனின்றி காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவரின் மறைவுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். சமீபத்தில் தான் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்து இருந்தது.

- Advertisement -

விவேக் மனைவியின் கோரிக்கை:

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வைத்து இருந்தார். அதில் அவர், நடிகர் விவேக் வீடு அமைந்திருக்கும் சாலைக்கு விவேக்கின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார். தமிழக அரசு இந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக விவேக் பெயரை சூட்ட வேண்டும் என அரசாணையை போட்டு இருந்தது. அதன் பெயரில் விவேக் நினைவாக அவர் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள பத்மாவதி நகர் பிரதான சாலையை ‘சின்னக் கலைவாணர் நகர் சாலை’ என பெயர் மாற்றம் செய்து இருக்கிறது.

விவேக் சாலை பெயர் திறப்பு விழா:

இந்த பலகை திறப்பு விழாவில் விவேக் குடும்பத்தினர் கலந்துகொண்டு நன்றி தெரிவித்து இருந்தார்கள். மேலும், இதற்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலரும் வாழ்த்துக் கூறி அரசுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்கள். அந்த வகையில் இயக்குனர் மோகன்ஜி அவர்களும் டீவ்ட் போட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த செயலுக்கு தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள். சின்ன கலைவாணர் போலவே தனது வாழ்வில் அதிக சேவை புரிந்த வடச்சென்னை சேர்ந்த மக்கள் மருத்துவர் டாக்டர் திரு ஜெயசந்திரன் அவர்களுக்கும் உரிய மரியாதை அளித்து கௌரவப்படுத்துமாறு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

டாக்டர் ஜெயச்சந்திரன் குறித்து மோகன் போட்ட டீவ்ட்:

இப்படி மோகன்ஜி பதிவிட்டிருக்கும் டாக்டர் ஜெயச்சந்திரன் வேற யாரும் இல்லைங்க, 5 ரூபாய் மருத்துவர். மருத்துவத்தை வணிகமாக கருதும் பெரும்பாலான மருத்துவர்களுக்கு மத்தியில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த மருத்துவர் தான் ஜெயச்சந்திரன். மேலும், கைராசி டாக்டர், மக்கள் மருத்துவர், சமூக மருத்துவர், ஐந்து ரூபாய் டாக்டர் என்று இவருக்கு பல பட்டங்கள் இருக்கிறது. கல்பாக்கம் கொடைபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது அப்பா சுப்பிரமணி விவசாயி. உடம்பு சரியில்லை என்றால் கூட 30 கிலோ மீட்டர் தாண்டி போய் மருத்துவம் பார்க்க வேண்டிய சூழலில் இருந்தவர் ஜெயச்சந்திரன்.

டாக்டர் ஜெயச்சந்திரன் பற்றிய தகவல்:

தன்னுடைய கிராமத்தின் நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே ஜெயச்சந்திரன் மருத்துவம் படித்தார். மருத்துவம் வியாபாரம் ஆகி விடக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்ட ஜெயச்சந்திரன் தன்னுடைய கிராமம் போலவே அடிப்படை வசதி இல்லாமல் இருந்த வண்ணார்பேட்டையில் உள்ள வெங்கடாசலம் தெருவில் 1971ஆம் ஆண்டு கிளினிக்கை ஆரம்பித்தார். சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் குறைந்தபட்சம் இரண்டு ரூபாயிலிருந்து அதிகபட்சம் ஐந்து ரூபாய் வரை கட்டணம் வாங்கி இருந்தார். சுமார் 40 ஆண்டுகளாக இதையை பெற்று இருக்கிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை டாக்டர் ஜெயச்சந்திரன் நடத்தியிருக்கிறார்.

டாக்டர் ஜெயச்சந்திரன் மரணம்:

நேதாஜி சமூக சேவை இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து கல்வி உதவித்தொகை, சிறுவர்களுக்கு தேவையான உதவிகள் என அனைத்து உதவிகளையும் செய்து வந்து இருக்கிறார். இப்படி மக்களுக்காகவே வாழ்ந்து இருந்த டாக்டர் ஜெயச்சந்திரன் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவருடைய இழப்பு வண்ணார்பேட்டை பகுதி மக்களிடை மட்டுமில்லாமல் பல பேருக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இவரை தான் கௌரவிக்க வேண்டும் தற்போது இயக்குனர் மோகன்ஜி கோரிக்கை வைத்திருக்கிறார். இதற்கு கோரிக்கையை தமிழக அரசு ஏற்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Advertisement