இயக்குனர் மற்றும் நடிகருமான செல்வராகவன் நடித்து இன்று வெளியாகி இருக்கின்ற திரைப்படம் தான் “பகாசூரன்”. இப்படத்தை பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ரதாண்டவம், திரெளபதி என பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் மோகன் ஜி இயக்க சாம் சி எஸ் இசையமைத்திருகிறார். மேலும் நடராஜ், ராதாரவி, ராஜன், மன்சூர் அலி கான், தர்க்ஷ, என பலர் நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கூறும் படமாக இருந்ததா? இல்லை இந்த படமே ஒரு பிரச்சனையா என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
கதைக்களம் :
கதையில் தன்னுடைய அண்ணன் மகன் மேற்க்கொண்ட மர்மமான தற்கொலையை தொடர்ந்து அதற்கான காரணத்தை தேடுகிறார் மேஜர் நட்டி. அந்த காரணத்தைக் கண்டு மிரண்டு போன நட்டி இதே போன்று பாதிக்கப்பட்ட பெண்களை மீட்க அவர்களின் பாதிக்கப்பட்ட தந்தையை தேடி அழைகிறார். அதே சமயம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தனது மகளின் இறப்பிற்கு காரணமானவர்களை பழிவாங்குகிறார் பீமராசுவாக வரும் இயக்குனர் செல்வராகவன் இருவரும் சந்திக்கும் புள்ளியே பகாசுரன் திரைப்படம்.
இந்த படத்திற்கு இசையமைத்த சாம் சி எஸ் இசை நாற்றாகவே படத்திற்கு கைகொடுத்திருக்கிறது. அது போல பின்னணி இசையும் பிரமாதம். ஆனால் படத்தில் முதலில் வரும் பாடலை தவிர மற்றவை ரசிக்கும் படியாக இல்லை. தன்னுடைய முந்தையா படங்களை விட சிறப்பான படத்தையே இயக்குனர் மோகன் ஜி கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். திரைக்கதை சரியாக இருந்தாலும் வசனம் ஆங்காங்ககே சரியாக இல்லை, அதே போன்று பெண்களை பாதுகாக்க வேண்டும் என சொல்லும் இயக்குனர் மோகன் ஜி படத்தில் ஆபாசமான நடனம் வைப்பது என்னவென்று சொல்வது.
படத்தில் சில பிற்போக்கான வசனங்கள் இருந்தாலும் படத்தின் முதல் பாதி பரவாயில்லை. இரண்டாம் பாதி சொல்லவரும் கருத்து வந்தாலும் பெண்களின் உரிமை மற்றும், பாலியல் தொழிலுக்கு ஆதரவாக இருப்பது காதல் தான் என்பது போல சித்தரித்தது சரியாக இல்லை. படத்தில் தந்தை மகள் பாசம் பாடல் வருகிறது. ஆபாசமாக பெண்களை படமெடுத்து மிரட்டுபவர்களுக்கு தண்டனை வாங்கி தராமல் பெண்கள் சரியாக இருந்தால் இந்த பிரச்சனை வராது என கூறுவது இயக்குனர் மோகன் ஜிக்கே வெளிச்சம்.
பல இடங்களில் லாஜிக் குறைபாடுகள் வருகின்றன, குறிப்பாக ஓய்வு பெற்ற மேஜர் நட்டி ஆதாரங்களை தேடி அழையும் போது தொடர்ந்து கொலைகளை செய்து விட்டு செல்கிறார் செல்வராகவன். இவர்களுக்கு இடையே காவல் துறை ஓன்று இருக்க என தோன்றுகிறது. மற்றபடி இணையத்தில் ஏற்படும் சில பிரச்னைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. கதையில் சில இடங்களில் பிற்போக்கு தனம் இருந்தாலும் கதை ரசிக்கும்படியாகத்தான் இருந்தது.
குறை :
பெண் உரிமைகளை கோருபவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கிறார்.
பல இடங்களில் லாஜிக் குறைபாடுகள்.
சுவாரசியம் இல்லாத திரைக்கதை
வசனங்கள் பொருத்தமாக இல்லை.
நிறை :
செல்வராகவன் நடிப்பு பிரமாதம்.
பின்னணி இசை பரவாயில்லை.
பிரச்சனைகள் எங்கிருந்து வருகிறது என்று சொல்லிய இயக்குனர், அதற்க்கான தீர்வை கூறாதது ஏமாற்றமே.
மோகன் ஜி இதுவரை இயக்கிய படங்கள் அனைத்தும் பெரும் பேசுபொருளாக்கி இருக்கிறது. அதிலும் திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை டார்கெட் செய்தது போலவே இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவது தவறு, செல்போன் பயன்படுத்தினால் தவறு, அறிவில் கண்டுபிடிப்புகளையும் ஆபத்தானது என்பது போல காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இந்த படத்தில் ஏகப்பட்ட வசனங்கள் பிற்போக்குத்தனமாக இருக்கிறது அதில் சில எடுத்துக்காட்டுகளாக சென்னையில் வாழ்பவர்கள் வெளிநாட்டில் வாழ்பவர்களாக மாறிவிட்டதாக வரும் வசனம் ஆகட்டும், ஊருக்குள்ளேயே படிக்க வைக்க வேண்டியதுதானே என்ற வசனம் ஆகட்டும். நம்ம பிள்ளைங்க ரூமுக்குள்ள என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் போன்ற வசனங்களாக இருக்கட்டும், இப்படியான வசனங்களை வைத்தே இந்த படம் எப்படியான கருத்தை சொல்ல வந்து இருக்கிறது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். இதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு ஒரு படமாக இப்படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் முதல் பாதி ஓகே இரண்டாம் பாதி சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை.