வெளியானது பாலாவின் “வர்மா” First Look Poster..! கிண்டல் செய்த ரசிகர்கள்.!

0
119
Bala
- Advertisement -

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும், `வர்மா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடித்து ஹிட்டடித்த திரைப்படம், அர்ஜுன் ரெட்டி. இயக்குநர் பாலா, இதைத் தமிழில் ரீமேக் செய்கிறார். இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மாடல் மேகா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

- Advertisement -

நாளை (செப்டம்பர் 23ம் தேதி) விக்ரமின் மகன் துருவ் விக்ரமின் பிறந்தநாளை ஒட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். பெரிதும் எதிர்பார்த்த இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களின் வரவேற்பை பெறுவதற்கு பதிலாக, கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், ஒரிஜினல் “அர்ஜுன் ரெட்டி” படத்திற்கு கால்பங்கு கூட இல்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், இது அர்ஜுன் ரெட்டி கெட்டப் போல தெரியவில்லை, ஏதோ டி ஆர் கெட்டப்போல இருக்கிறது என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement