இது நடந்தால் மட்டுமே நாங்கள் ஒன்று சேர்வோம்..! பாலாஜி இதை செய்வாரா..?

0
1063
Thadi-balaji-and-nithya
- Advertisement -

பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யாவிற்கும் நடந்த பிரச்சனைகள் குறித்து அனைவரும் அறிவார்கள். இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ள நிலையில் இவர்கள் இருவரும் சமீபதில் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

Thadi Balaji - Nithya

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய காலகட்டத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே பல மோதல்கள் ஏற்பட்டது. பின்னர் நாட்கள் செல்ல இவர்கள் இருவரும் சகஜமாக பழகி வந்தனர். இதனால் இவர்கள் இருவரும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என்று மக்கள் யூகித்து வந்தனர்.

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் நித்யா அளித்து வரும் சில பேட்டிகளில் மக்கள் எதிர்பார்க்காத பல விடயங்களை பற்றி கூறி வருகிறார். ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியே வரும் முன்னர் பாலாஜியிடம் , நான் நேராக சென்று விவாகரத்து வேலைகளை தான் பார்ப்பேன் என்று தான் கூறிவிட்டு வந்தேன்’ என்று பரபரப்பான விடயத்தை கூறியுள்ளார் நித்யா.

-விளம்பரம்-

Nithya

அதே போல பாலாஜியை பற்றி கூறிய நித்யா “ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய தனிப்பட்ட சுதந்திரத்தை கொடுத்திருக்க வேண்டும். பெண் என்பதை விட ஒரு அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய தனிப்பட்ட சுதந்திரத்தை கொடுத்தாலே நாங்கள் இருவரும் மீண்டும் ஒன்றாக சேர்ந்துவிடுவோம்” என்று நித்யா தெரிவித்திருந்தார்.

Advertisement