ராஜா ராணி பட நடிகையை ரகசியமாக இரண்டாம் திருமணம் முடித்துள்ள மாரி பட இயக்குனர்.

0
443
dhanya
- Advertisement -

காதல் செய்வது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். அதன் பின்னர் வாயை மூடி பேசவும், தனுஷ் நடித்திருந்த மாரி 1 மற்றும் மாரி 2 போன்ற படங்களை இவர் இயக்கியுள்ளார். மேலும் மாடேன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாவு நடித்திருந்த தேசிய விருது பெற்ற படமான “மண்டேலா” திரைப்படத்ததை தயாரித்தும் உள்ளார். அதோடு சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இயக்குனர் மோகன் கடந்த 2012ஆம் ஆண்டு தன்னுடைய முதல் திரைப்படத்தை எடுக்கும் போது அருணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில காலங்கிலேயே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இப்படிப்பட்ட நிலையில் தெலுங்கு வெப் சீரிஸ் நடிகையான கல்பிகா கணேஷ் இயக்குனர் பாலாஜி மோகனுக்கும் நடிகை தன்யா பாலகிருஷ்ணனுக்கும் திருமணம் நடந்து விட்டதாகவும் அதனை அவர்கள் இருவரும் மறுப்பதாகவும் வீடியோ ஓன்று அவரது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

ஆனால் அந்த வீடியோ பதிவை பாலாஜி மோகன் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி நீக்கி விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகவே இந்த விஷயம் குறித்து இயக்குனர் பாலாஜி சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார். அதாவது பாலாஜி தான் தன்யா பாலகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அதோடு தன்னை குறித்தும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவதூறாக நடிகை கல்பிகா கணேஷ் பேசியுள்ளதாக குற்றம் சாட்டி அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடந்துள்ளார். இது குறித்து பாலாஜி நீதி மன்றத்தில் கூறியிருப்பது `நான் கடந்த ஜனவரி 23ஆம் தேதி தான்ய பாலகிருஷ்னனை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் இதனை தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ் என்பவர் எங்களை பற்றியும் எங்களுடைய தனிப்பட்ட வாழ்கை பற்றியும் அவதூறாக பேசியுள்ளார்.

-விளம்பரம்-

அதோடு எங்களை பற்றி அவதூறும் பரப்பும் வகையில் வீடியோக்களை யூடியூப் சேனலில் வெளியிட்டது மட்டுமில்லாமல் சோசியல் மீடியாக்களில் பரப்பியுள்ளார். இதனால் அவர் அவதூறாக கருத்து தெரிவித்தற்காக ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக தர வேண்டும் என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து கல்பிகா கனேஸுக்கு நீதிமன்றம் தடை விதித்து இந்த மனுவுக்கு வரும் ஜனவரி 20ஆம் தேதிக்குள் சரியான பதிலளிக்க வேண்டும் என்று வழக்கை ஒத்திப்போட்டுள்ளனர்.

Advertisement