ஏய், எழு, போட்டோவுக்கு போஸ் கொடு ‘தூங்கிய குழந்தையை அடித்து எழுப்பிய பாலகிருஷ்ணா – கடுப்பான நெட்டிசன்கள்

0
558
balakrishna
- Advertisement -

தூங்கியிருந்த குழந்தையை அடித்து எழுப்பி போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்த நடிகர் பாலகிருஷ்ணாவின் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தெலுங்கு சினிமாவில் பல ஆண்டு காலமாக மிகப் பிரபலமான நடிகராக கொடிகட்டி பறப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் ஆரசியல்வாதியும் ஆவார்.

-விளம்பரம்-

ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என் டி ராமாராவ் அவர்களின் ஆறாவது மகன் தான் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர் குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

பாலகிருஷ்ணா திரைப்பயணம்:

இதனிடையே இவர் 1982 ஆம் ஆண்டு வசுந்தரா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. தற்போது இவருக்கு 61 வயதாகிறது. அதோடு இவர் ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து இருக்கிறார். வயதானாலும் பாலகிருஷ்ணா அவர்கள் இன்னும் படங்களில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் அதிரடி, ஆக்ஷன் போன்ற படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா.

பாலகிருஷ்ணா குறித்த தகவல்:

மேலும், இவர் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் இவருடைய கருத்துக்கள் மற்றும் செய்திகளை மூலம் தொடர்ந்து பல விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார். செல்பி எடுக்க வரும் ரசிகர்களை தாக்குவது, சர்ச்சையான கருத்துக்களை பேசுவது போன்ற பல விஷயங்களால் பாலகிருஷ்ணா மீது விமர்சனங்கள் எழுந்து இருக்கிறது. இதனால் இவரை சர்ச்சை நாயகன் என்று கூட என்று சொல்கிறார்கள்.

-விளம்பரம்-

பாலகிருஷ்ணா செய்த மோசமான செயல்:

மேலும், இவருக்கு என்று டோலிவுட்டில் ஒரு பெரும் ரசிகர் கூட்டமும் இருக்கிறது. ஆனால், தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் இவரை நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ், ரோஸ்ட் செய்து வருகிறார்க. ஏன்னா, அந்த அளவிற்கு அவருடைய படங்கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் கேலிக் உள்ளாக்கப்பட்டு விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் நந்தமூரி பாலகிருஷ்ணா சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அது என்னவென்றால்,

பாலகிருஷ்ணா மீது கடுப்பில் ரசிகர்கள்:

தன்னுடன் போட்டோ எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் குழந்தையை பாலகிருஷ்ணா தூக்கத்திலிருந்து அடித்து எழுப்பி போஸ் கொடுக்கும் படி மிரட்டியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. இது ஒருபக்கம் நெட்டிசன்கள் மத்தியில் சிரிப்பாக இருந்தாலும், இன்னொரு பக்கம் இதுகுறித்து பலரும் மோசமான செயல் என்றும் கூறி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் இதற்கு முன்பு இவர் ஏ.ஆர்.ரகுமானே தெரியாது என்ற சர்ச்சையில் சிக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement