ஜாமினில் வெளிவந்த பார் நாகராஜ்.! போலீசாருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்.!வெளியான ஷாக்கிங் புகைப்படம்.!

0
2147
- Advertisement -

பொள்ளாச்சியில் இளம் பெண்களை மயக்கி பாலியல் வன்கொடுமை செய்தும், ஆபாசமாக படம் எடுத்தும் அவா்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பல் அண்மையில் பிடிபட்டது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், ரிஷ்வந்த் ஆகிய நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

-விளம்பரம்-

இவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவே இயக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்க : பொள்ளாச்சி கொடூரம் : நேரத்தை வீணாக்காதீர்கள்.! விடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா தத்தா.!

- Advertisement -

ஏற்கனவே ஒரு வீடியோ படு வைரலாக பரவி வந்த நிலையில் பார் நாகராஜ் என்பவர், பெண்களை வலுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுபட வைத்த மூன்று புதிய விடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதனால் பார் நாகராஜன் மீதும் பாலியில் குற்றத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

ஆனால், அந்த விடீயோவைல் இருப்பது தான் இல்லை என்றும், அது வீடியோவில் இருப்பது சதீஷ் என்றும் கூறி பார் நாகராஜ் ஒரு வீடியோ ஒன்றைவெளியிட்டார் நாகராஜ். மேலும், தன் மீது அடிதடி வழக்கு மட்டும் தான் இருக்கிறது அது தொடர்பாக காவல் துறையினர் எப்போதும் அழைத்தாலும் செல்வேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

நாகராஜ் குற்றவாளி என்று தெரிந்தும் அரசியல் செல்வாக்கு காரணமாக அவர், கைது செய்யப்படாமல் இருப்பதை பலரும் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜாமினில் வெளிவந்த நாகராஜ், போலீசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement