மேடையில் குடும்பத்துடன் அழுத ரோபோ சங்கர்.! அனைவரையும் நெகிழவைத்த வீடியோ.!

0
748

விஜய் டிவி மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் காமெடியனாக வலம் வருபவர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் தொடங்கிய இவரது பயணம், வெள்ளித்திரையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார்.

ரோபோ ஷங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்றார். அப்போது பாடி பில்டராக இருந்த அவர், மேடை காமெடியனாக அறிமுகமானர். அதன் பின்னர் தொகுப்பாளராகவும்,நடன கலைஞராகவும் இருந்து வந்தார். பின்னர் பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து 2002 இல் திருமணம் செய்துகொண்டார்.

- Advertisement -

இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர் அதில் ஒரு மகள் தற்போது விஜய் 63 படத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ரோபோவின் மனைவி கலக்கப்போவது யாரு சீசன் 8 ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இதில் இருவரும் கணவன் மனைவியாக ஜோடி சேர்ந்து ரவுடி பேபி பாடலுக்கு நடனமாட அனைவரும் மகிழ்ந்தனர். அதன் பின்னர் மேடையில் அவரின் இருமகள்களும் அம்மாவை கட்டிப்பிடித்து அழ ரோபோ சங்கர் உட்பட அனைவரும் உணர்ச்சிவசமடைந்தனர்.

-விளம்பரம்-
Advertisement