பொள்ளாச்சி கொடூரம் : நேரத்தை வீணாக்காதீர்கள்.! விடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா தத்தா.!

0
1180
Aiswarya-Dutta-Pollachi-Issue
- Advertisement -

தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள பாலியல் சம்பவம் தான் தற்போது நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பெண்களை ஆசை வார்த்தை பேசி அவர்களை உடலுறவில் ஈடுபட வைத்து வீடியோ எடுத்து, அதன் மூலம் அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலை சேர்ந்த 4 பேர் சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

-விளம்பரம்-

ஆனால், இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை பத்தாது எனவும் அரபு நாடுகளைப் போல இவர்களை மக்கள் மத்தியில் கொடூரமாக கொலை செய்து தண்டனை அளிக்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சிலர் இன்னும் சுதந்திரமாக வெளியில் சுற்றி வருவதால் அவர்களையும் கைது செய்யக்கோரி பொள்ளாச்சியில் உள்ள மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க : பெண்களை பாலியல் சித்தரவதை செய்த வீடியோவில் இருப்பது இவரது வீடு தான்.! விசாரணையில் அம்பலம்.! 

- Advertisement -

இந்தக் கொடூர சம்பவத்தை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பல்வேறு நடிகர் நடிகைகளும் சமூகவலைதளத்தில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகை ஐஸ்வர்யா இந்த சம்பவம் குறித்து தனது கருத்தினை வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார்.

Advertisement