ஒரே டைரக்டர் தான், அதுக்குன்னு ரெண்டிலும் ஒரே சீனா வைப்பீங்க – கேலிக்கு உள்ளான ராஜா ராணி, பாரதி கண்ணம்மா சீரியல் காட்சிகள்.

0
295
barathi
- Advertisement -

எத்தனை சீரியலில் ஒரே சீசனை வைப்பீர்கள் என்று ராஜா ராணி சீரியலை நெட்டிசன்கள் விமர்சித்து இருக்கும் ட்ரோல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேடிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், சீரியல்கள் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டாலும் சோசியல் மீடியாவில் சீரியல்கள் குறித்த ட்ரோல்,மீம்ஸ் வருவது வழக்கமான ஒன்று தான்.

-விளம்பரம்-

அதிலும் அதிகமாக ட்ரோல் செய்யப்படுவது விஜய் டிவியின் சீரியல்கள் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது. அந்தவகையில் பாரதிகண்ணம்மா சீரியலில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வைத்துக்கொண்டு பல ஆண்டு காலமாக இயக்குனர் விதவிதமாக சீரியலை ஓட்டிக்கொண்டு வருகிறார் என்று பார்வையாளர்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். அதே வரிசையில் சமீப காலமாக அதிகமாக முத்தழகு சீரியல் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

ராஜா ராணி சீரியல் பற்றிய தகவல்:

இந்த இரண்டுமே விஜய் டிவி சீரியல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது ராஜா ராணி 2 சீரியலும் சிக்கி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியல் இளைஞர்கள் முதல் பல குடும்பங்கள் வரை என எல்லோர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ராஜா ராணி 2 என்ற சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்டது.

ராஜா ராணி 2 சீரியல்:

இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடிக்கிறார். மேலும், இந்த தொடர் ஹிந்தி சீரியல் Diya Aur Baati Hum ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இல்லாமல் தமிழில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெண்ணெட் இயக்கி வருகிறார். முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசனையும் இவரே எடுத்து வருகிறார். தற்போது இந்த சீரியல் டிஆர்பியில் முதல் இடத்தில் உள்ளது. பல திருப்பங்களுடன் ராஜா ராணி 2 சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் விமர்சிக்கும் சீரியல்:

இந்த நிலையில் தற்போது ரசிகர்களை கவர்ந்த ராஜா ராணி 2 சீரியலும் பயங்கரமாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர்கள் ட்ரோல் செய்யும் அளவுக்கு ராஜா ராணி 2 சீரியலில் அப்படி என்ன நடந்தது? ஏற்கனவே தமிழில் என் கணவன் என் தோழன் என்ற பெயரில் சீரியல் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. பின் ராஜா ராணி 2 சீரியல் கதை இது தான் என்று பலருக்கும் தெரியும். அதுமட்டுமின்றி காட்சிகளும் இப்படித்தான் இருக்கும் என்று பலருக்கும் தெரியும். இருந்தாலும் இயக்குனர் ஜவ்வுமிட்டாய் போல ஒரு சில காட்சிகளை வைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Raja Rani 2 Alya And Sanjeev | ராஜா ராணி 2 சீரியல் ஆலியா

ராஜா ராணி 2 சீரியல் ட்ரோல்:

மேலும், வேறு சில சீரியல்களில் இருக்கும் அதே காட்சிகள் ரிப்பீட் மோடில் ஒவ்வொரு சீரியலும் வைத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகிறார். அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியல் சீலிங்கில் சுற்றிக்கொண்டிருக்கும் பேன் கீழே விழுவது போன்ற காட்சிகள் இரண்டு முறை வைக்கப்பட்டிருந்தது. இப்போது அதுபோன்ற காட்சிகள் ராஜா ராணி 2 சீரியலில் ஒளிபரப்பானது. இதைப்பார்த்த ரசிகர்கள் பயங்கரமாக சீரியல் குறித்து ட்ரோல் செய்து வருகின்றனர். நெட்டிசன்கள் பலரும் பலவிதமாக ராஜா-ராணி 2 சீரியலை கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement