தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின் இருவரும் சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் பிரிய இருப்பதாககடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. இப்படி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்த பிறகு படங்களில் இருவரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
டாட்டூ குறித்து புலம்பிய சமந்தா :
விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி வரும் சமந்தா அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்கலுடனான உரையாடலின் போது ரசிகர் ஒருவர், ர் நீங்கள் எந்த விதமான டாட்டூக்களை குத்திக் கொள்ளலாம் என முன்பு ஐடியாக்கள் வைத்திருந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சமந்தா, “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா..? என்னுடைய இளமை காலத்தில் நான் ஒருபோதும் டாட்டூ குத்திக்கொள்ள கூடாது என்பதில் மிகத்தீவிரமாக இருந்தேன்” என்று பதில் அளித்துள்ளார்.
சமந்தாவின் முதல் டாட்டூ :
சமந்தா தனது உடலில் மொத்தம் மூன்று டாட்டூக்களை குத்தி இருக்கிறார். திருமணத்திற்கு முன்பு ஒரு காலகட்டத்தில் நடிகை சமந்தா டாட்டூ வரைந்து கொள்வதில் ரொம்பவே ஆர்வம் காட்டி வந்தார். தான் அறிமுகமான ஏ மாய சேசாவே என்கிற படத்தில் நடித்ததன் ஞாபகார்த்தமாக முதன்முறையாக ஒய்எம்சி என்கிற டாட்டூவை குத்திக்கொண்டார். அதில் ஒன்று கையில் இருக்கும் டாட்டூ, இதே போல டாட்டூவை நாக சைதன்யாவும் தனது கையில் குத்தி இருப்பார். இந்த டாட்டூவிற்கு அர்த்தம் ‘Create Your Own Reality’ என்று அர்த்தம். அதே போல சமந்தா தனது உடலின் பக்காவாடில் டாட்டூ ஒன்றை குத்தி இருந்தார். ஆனால், இதை மிகவும் ரகசியமாகவே வைத்து வந்தார் சமந்தா.
ரகசியமாக வைத்திருந்த tatoo :
அதற்கு காரணம், அந்த டாட்டூ, ‘chaai’ என்ற நாக சைதன்யாவின் பெயரின் சுருக்கம் தான். இந்த டாட்டூ கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி ஒரு புகைப்படத்தின் மூலம் தெரிவித்தார் சமந்தா. ன் இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதுநாள் வரை நான் மறைத்து வைத்த டாட்டூ, கடைசியாக வெளியில், நாக சைதன்யா, என் கணவர், என் உலகம் என பதிவிட்டு இருந்தார்.
நயன் போல tatooவால் புலம்பும் சமந்தா :
பொதுவாக காதலிக்கும் போது காதலர் பெயரையொ காதலர் பெயரையோ டாட்டூ குத்தி கொள்வது வாடிக்கையான ஒரு விஷயம் தான். அந்த வகையில் நயன்தாராவும் பிரபுதேவா பெயரை டாட்டூ குத்தி இருந்தார். ஆனால், அவருடன் பிரேக்கப் ஆன பின்னர் அதை Positivity என்று மாற்றிவிட்டார் நயன். நயனுக்காவது ஒரு டாட்டூ தான், ஆனால் சமந்தா தன் கணவர் சம்மந்தமாக மூன்று டாட்டூவை போட்டுவிட்டு தற்போது அதை என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி கொண்டு இருக்கிறார்.