நாஞ்சில் விஜயனுக்கு விரைவில் திருமணம், எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம். பெண் யார் தெரியுமா ?

0
1967
Nanjil
- Advertisement -

விஜய் டிவி நாஞ்சில் விஜயனுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற பல்வேறு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். மேடை கலைஞராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் நாஞ்சில் விஜயன்.

-விளம்பரம்-

பின் தன்னுடைய விடாமுயற்சியினால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் லேடிஸ் கெட்டப்பில் தான் நடித்து இருக்கிறார். இதற்கென்றே நாஞ்சில் விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. மேலும், இவர் விஜய் டிவியின் மூலம் கிடைத்த பிரபலத்தினால் சில படங்களில் நடித்திருக்கிறார். பின் இவர் கடந்த ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த சீரியல் நன்றாக தான் சென்று கொண்டு இருந்தது. ஆனால், திடீர் என்று இந்த சீரியலை ஜீ தமிழில் முடித்து விட்டது. அதன் பின் இவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். அதோடு இவர் தனியாக யூடுயூப் சேனல் ஒன்று தொடங்கி இருக்கிறார். அதில் இவர் பதிவிடும் வீடியோக்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதோடு இவர் சில குறும்படங்களில் நடித்து இருக்கிறார்.

இதனிடையே கடந்த 2020ஆம் ஆண்டு இவருக்கும் டிக் டாக் பிரபலமான சூர்யா தேவிக்கும் இடையில் ஏற்பட்ட சில கருத்து தேவிக்கும் சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையில் சூர்யா தேவி அடி ஆட்களுடன் சென்று நாஞ்சில் விஜயனை கடுமையாக தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் சூரியா தேவியை கைது செய்தனர். இந்த நிலையில் சூர்யா தேவி போலீசில் கொடுத்திருந்த வாக்குமூலத்தில் வனிதாவை என்னுடன் சேர்ந்து அவதூறாக பேசிவிட்டு இப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டனர். இது குறித்துதான் நான் கேட்க்க சென்றிருந்தேன்.

-விளம்பரம்-

ஆனால், அவர் தான் என்னை உருட்டுக்கட்டையால் தாக்கினார் என்று கூறவே நாஞ்சில் விஜயனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தார்கள். பின் சிறையில் இருந்து வந்த பின்பு நாஞ்சில் விஜயன் பேட்டி கூட அளித்து இருந்தார். அதற்குப்பின் நாஞ்சில் விஜயன் தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ஷோவிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார்.

நாஞ்சில் விஜயன் வீட்டில் விசேஷம்:

இந்த நிலையில் நாஞ்சில் விஜயன் வீட்டில் விசேஷம் நடந்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, நாஞ்சில் விஜயனுக்கு தான் தற்போது நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இது தொடர்பான புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். மேலும், அவர் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் அவரது உறவினர் என்றும் கூறப்படுகிறது.

Advertisement