‘என்னால சிரிப்ப அடக்க முடியல’ – பாரதி கண்ணம்மாவின் புதிய ப்ரோமோவை கண்டு கலாய்க்கும் ரசிகர்கள் (கமன்ட்ஸ்ஸ நீங்களே பாருங்க)

0
554
Barathi
- Advertisement -

பாரதி கண்ணம்மாவின் இந்த வார ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கடுப்பாகி மீம்ஸ்களை சோசியல் மீடியாவில் தெறிக்கவிட்டு வருகின்றனர். தற்போது இந்த மீம்ஸ் தான் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்து வருகிறது. அதில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் தொடங்கப்பட்ட நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக முதலில் ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி தேவி அச்சு அசலாக ரோஷினி போல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு வினுஷா இந்த தொடரில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து சீரியலின் ட்ராக்கை மாற்ற ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு இடையில் சீரியலில் இருந்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி விலகியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதற்கு முன் பாரதியின் தம்பி அகிலன் விலகி இருந்தார்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா சீரியல் பற்றிய தகவல்:

இப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் பலர் மாற்றங்கள் செய்தாலும் டி ஆர் பியில் சீரியல் நல்ல இடத்தை பிடித்து இருந்தது. இப்படி டிஆர்பியில் டாப்பில் இருந்த சீரியலுக்கு இந்த நிலைமையா? என்று ரசிகர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பலரின் ஆதங்கமாக இருக்கிறது. தற்போது பாரதிகண்ணம்மா சீரியலின் கதை சம்பந்தமே இல்லாத டிராக்கில் செல்கிறது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஆரம்பத்தில் பாரதி கண்ணம்மா சண்டை, DNA பிரச்சனை, மீண்டும் பாரதிகண்ணம்மா இணைவார்களா? என்ற கோணத்தில் தான் கதை சென்று கொண்டிருந்தது.

சீரியல் கதை:

சமீபத்தில்கூட லட்சுமியின் அப்பா யார் என்ற உண்மை வெளிவருமா? என்று ரசிகர்களும் ஆவலாக பார்த்திருந்தனர். ஆனால், தற்போது கதை சம்பந்தமில்லாமல் செல்கிறது. தற்போது சீரியலில் பாரதி புது மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே மருத்துவமனையில் கண்ணம்மாவும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், வெண்பாவின் அம்மா வெண்பாவிற்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார். டிஎன்ஏ டெஸ்ட் தவிர மீதி எல்லா காட்சிகளும் சீரியலில் காண்பித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியலின் ப்ரோமோ:

தினமும் ஸ்கூலில் பார்த்துக்கொண்டிருந்த பாரதியும் கண்ணம்மாவும் தற்போது ஆஸ்பிட்டலில் சந்தித்துக் கொள்கிறார்கள். அதே சண்டை அதே பிரச்சினைதான். வெண்பாவுக்கு பதிலாக ஆஸ்பிடலில் கண்ணம்மாவுக்கு இந்த முறை வில்லன் ஒருவன் உருவாக்கி இருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரம் சீரியல் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் கடுப்பாகி இருக்கின்றனர். நிஜ சம்பவம் ஒன்றை சீரியலின் இயக்குநர் கையில் எடுத்து இருக்கிறார். அது என்னவென்றால், சென்னை ஒருநாள் படத்தின் கதையைப் போலவே சக்தி என்ற குழந்தைக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்கிறார் பாரதி. அவருக்கு உறுதுணையாக இருக்கிறார் கண்ணம்மா.

சீரியலை விமர்சிக்கும் ரசிகர்கள்:

இது நல்ல ஒரு சோசியல் மெசேஜ் என்றாலும் ரசிகர்கள் பலரும் கடுப்பாகி சீரியல் குறித்து ட்ரோல் செய்து இருக்கின்றனர். சீரியலில் வித்தியாசம் எதிர் பார்க்கும் ரசிகர்களுக்கு இயக்குனர் ஏதாவது ஒரு டீவ்ஸ்ட் தர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். அதனால் சம்மந்தமே இல்லாமல் கதையை கொண்டு செல்கின்றார் என்றும், துர்காவின் என்றி அல்லது வருணின் என்றி இருந்தால் கதை சிறப்பாக இருந்திருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், படங்களின் கான்சப்ட் எடுத்து செல்வது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது, இனிமேலாவது இயக்குனர் சீரியலின் கதையை சரியான நோக்கில் கொண்டு சென்றால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement