சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த இரண்டு படத்தின் நாயகி வாய்ப்பை தவறவிட்டுள்ள கண்ணம்மா.

0
506
roshini
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் தொடர்களில் பாரதி கண்ணம்மா ஒன்று. இந்த தொடர் விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்பிரியன் நடித்திருந்தார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலின் டிஆர்பிக்கு முக்கிய காரணம் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோஷினி தான். அந்த அளவிற்கு இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.

-விளம்பரம்-

சினிமா வைப்பால் விலகல் :

அதோடு இந்த சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் என்று சொல்லலாம். பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தவுடன் பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக தற்போது வினுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வருகிறார். மேலும், சீரியலில் இருந்து ரோஷினி வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அவர் சினிமாவில் நடிக்கப்போகிறார் என்று சொன்னவுடன் குஷி ஆகி விட்டார்கள்.

- Advertisement -

ரோஷினி போனதும் தடுமாறிய Trp :

அதுமட்டும் இல்லாமல் இவர் சீரியலை விட்டு விலகியதும் ஆரம்பத்தில் சீரியல் டிஆர்பி சற்று தடுமாறியது என்று சொல்லலாம். மேலும், புதிய கண்ணம்மாவாக நடித்திருக்கும் வினுஷா பார்ப்பதற்கு அப்படியே ரோஷினை போல இருப்பதால் மக்கள் அவரை சீக்கிரமாக ஏற்றுக் கொண்டார்கள்.இந்நிலையில் இரண்டு சூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை ரோஷினி இழந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

சர்பட்டா பரம்பரை வாய்ப்பு :

பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும்போது பல சூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை இழந்திருக்கிறார். அதிலும் இவர் இரண்டு சூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை இழந்துள்ளார். அது என்னவென்றால், இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் இந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படம் சார்பாட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யா தன்னுடைய திறமையான நடிப்பை வெளிக் இருந்தார்.

-விளம்பரம்-

ஜெய் பீம் பட வாய்ப்பு :

இந்த படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ரோஷினிக்கு தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப்போது ரோஷினி பாரதி கண்ணம்மா சீரியலில் கவனம் செலுத்தி இருந்தால் இந்த வாய்ப்பை இழந்து விட்டார். இதனை தொடர்ந்து சமீபத்தில் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த படம் ஜெய்பீம். இந்த படம் பழங்குடியின மக்களின் பிரச்சனைகளையும், உண்மையில் நடந்த சம்பவத்தையும் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியது.

இந்த படம் பலதரப்பட்ட மக்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இப்படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தில் முதலில் ரோஷனிக்கு தான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ரோஷினி சீரியலில் நடித்து வந்ததால் அந்த வாய்ப்பையும் ஏற்க முடியாமல் போனது. இப்படி தொடர்ந்து பல படங்களில் பாரதிகண்ணம்மா சீரியலால் நடிக்க முடியாமல் போனது. இதனால் ரோஷினி சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

தொடர்ந்து சினிமா பயணத்தில் ரோஷினி :

தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இரண்டு சூப்பர் பட வாய்ப்புகளை இழந்த வேதனையில் இருக்கும் ரோஷனிக்கு தரமான கதைகள் மூலம் வெள்ளித்திரையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும், ரோஷினி நடிக்கும் படத்தின் தகவலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement