பாரதி கண்ணம்மா விஜயலட்சுமியின் இறப்பிற்கு என்ன காரணம் – கண்ணீருடன் அவரது மகள் அளித்த பேட்டி

0
2863
- Advertisement -

மறைந்த சீரியல் நடிகை விஜயலட்சுமியின் கடைசி ஆசை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல். இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவுக்கு வந்தது.

-விளம்பரம்-

பின் இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என்பதற்கு ஏற்ப இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பாரதி கண்ணம்மா தொடர் முதல் பாகம் முடிந்த கையோடு இரண்டாம் பாகம் துவங்கி இருக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் பாரதி, கண்ணம்மா, சௌந்தர்யா, வெண்பா, அஞ்சலி போன்ற முந்தைய சீசன் கதாபாத்திரங்களின் பெயர்களையே இரண்டாவது சீசனிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெயர்களையே மட்டும் இல்லாமல் கண்ணமாவாக முதல் சீசனில் நடித்த நடிகை வினுஷா தேவி நடிக்கிறார். பாரதியாக ரோஜா சீரியல் நாயகன் சிபு சூர்யன் நடிக்கிறார்.

- Advertisement -

விஜயலக்ஷ்மி குறித்த தகவல்:

மேலும், சரவணன் மீனாட்சி மற்றும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி. இவர் ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது என்ற என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் ரஜினி, கமல் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார். அதற்குப்பின் வாய்ப்புகள் குறைந்துடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்.

விஜயலக்ஷ்மி நடித்த சீரியல்கள்:

இவர் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது பாரதி கண்ணம்மா சீரியல் தான். பாரதி கண்ணம்மா சீசன் 1ல் கண்ணம்மாவின் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார் விஜயலட்சுமி. மேலும் இவர் நடிகை மட்டுமில்லாமல் சிறந்த டான்ஸரும் ஆவார். தற்போது இவருக்கு 70 வயதாகிறது. கடந்த சில மாதங்களாக விஜயலட்சுமி அவர்கள் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். பின் சில தினங்களுக்கு முன்பு இவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து தலையில் பலமாக அடியும் ஏற்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

விஜயலக்ஷ்மி மரணம்:

இதற்கும் இவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன் தான் இவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி இருக்கிறார். இந்த நிலையில் நேற்று காலை இவர் தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இவர் இறந்திருக்கும் சம்பவம் அறிந்து சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை விஜயலக்ஷ்மியின் கடைசி ஆசை குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எனக்கு சாகும் வரை நடிக்கணும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று இறப்பதற்கு முன் அளித்த பேட்டியில் நடிகை விஜயலக்ஷ்மி கூறி இருந்தார்.

விஜயலஷ்மி மகள் அளித்த பேட்டி:

மேலும், நடிகை விஜயலட்சுமி மகள் கிரண் கூறியது, அம்மாவுக்கு நடிக்கணும் என்பது தான் ரொம்ப ஆசை. பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பிறகு தொடர்ந்து பல சீரியல் வாய்ப்பு வந்தது. ஆனால், அவருடைய உடல்நிலை சரி இல்லாததால் அவர்களால் நடிக்க முடியவில்லை. சுகர் பிரச்சனையும் இருந்தது. அதற்காக அவர்கள் தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தார். நேற்று காலையில் தூக்கத்திலேயே அம்மா உயிர் பிரிந்து விட்டது. அம்மா எப்பவும் யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று நினைப்பார். அதே மாதிரி அம்மா எங்களை விட்டு சென்று விட்டார் என்று மன வேதனை உடன் கூறியிருந்தார்.

Advertisement