சேர்த்துக்கொள்ளாத வீட்டார், கணவரால் சீரியலில் இருந்து விலகிய பிரியங்கா – என்ன காரணம் ?

0
2759
Priyanka
- Advertisement -

சீதாராமன் தொடரில் இருந்து பிரியங்கா விலக இருக்கும் காரணம் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி நடைப்போட்ட தொடர்களில் ரோஜா சீரியலும் ஒன்று. இந்த தொடர் கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டு வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நிறைவடைந்தது. மேலும், ரோஜா சீரியலில் நாயகியாக நடித்தவர் பிரியங்கா.

-விளம்பரம்-

இவர் முதலில் தெலுங்கு மொழி சீரியல்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் தெலுங்கு மொழியில் வெளிவந்த பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் தமிழில் ரோஜா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து பிரியங்கா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

பிரியங்கா திரைப்பயணம்:

இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வரவேற்பு பெற்று வருகிறது. இதனிடையே நடிகை பிரியங்கா, தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலை காதலித்து வந்தார். பின் பிரியங்காவிற்கும் ராகுலுக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நிச்சயதார்தம் முடிந்தது. இவர்களின் திருமண நிட்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடம் ஆன நிலையில் இவர்கள் திருமணம் நின்றுபோனதாக தகவல்கள் வெளியானது .

பிரியங்கா காதல் விவகாரம்:

இப்படி ஒரு நிலையில் கடந்த மாதம் ப்ரியங்காவிற்கும் ராகுலுக்கும் விநாயகர் கோவிலில் படு சிம்பிளாக திருமணம் நடைபெற்றது. அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் பிரியங்கா. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். இந்த நிலையில் சீதாராமன் சீரியலில் இருந்து நாயகி பிரியங்கா வெளியேற இருக்கும் தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இது குறித்து சீரியலில் நடிக்கும் சிலரிடம் கேட்டபோது, ஆமாம் நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான்.

-விளம்பரம்-

சீரியலில் விலகும் பிரியங்கா:

இனி ஒரு ஸ்டெடியூல் தான் அவங்க நடிப்பாங்க என்று நினைக்கிறேன். அவர் கல்யாணம் முடிந்ததுமே கணவருடன் மலேசியா போய் விட்டார்கள். சூட்டிங்க்கு பிரியங்கா மலேசியாவில் இருந்து வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அனேகமா இந்த மாத கடைசி வரைக்கும் தான் அவர்கள் இந்த சீரியலில் இருப்பார்கள் என்று நினைக்கிறோம். பிரியங்காவுக்கு சீரியலில் நடிப்பது தான் ஆசை. ஆனால், அவர் கணவருக்கு பிரியங்கா தொடரில் நடிப்பதில் உடன்பாடு இல்லை. அது மட்டுமில்லாமல் அவர் நான் நன்றாக சம்பாதிக்கிறேன். அதனால் நீ நடித்தது போதும் என்று கூறி இருக்கிறார்.

பிரியங்கா விலக காரணம்:

இதனைத் தொடர்ந்து பிரியங்கா தரப்பில் கூறியிருப்பது, சீதாராமன் சீரியல் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. அந்த சீரியலில் இருந்து வெளியேற மனசே இல்லை தான். ஆனாலும், கணவர் சொல்கிறபோது அதை தட்ட முடியவில்லை. வேறு வழியும் இல்லை. அதனால் தான் தொடரில் இருந்து விலக முடிவு செய்து இருக்கிறார் பிரியங்கா என்று கூறியிருக்கிறார்கள். மேலும், தற்போது சேனல் தரப்பிலும் பிரியங்காவிற்கு பதில் வேறொரு நடிகையை கூட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement