சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சின்னத்திரை தொடர்கள் அமைந்துள்ளது. அதிலும் கொரோனா லாக் டவுனில் இருந்து அனைவரும் சின்னத்திரை சீரியலை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. அதுமட்டுமில்லாமல் இல்லத்தரசிகளின் பேவரேட்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா திகழ்ந்து வருகிறது.
இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது. இந்த சீரியலை குளோபல் வில்லேஜர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரவீன் பென்னட் இந்த சீரியலை இயக்கி வருகிறார். அதோடு இந்த சீரியல் சில வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக பாரதியாக ஹரிப்ரியன் நடித்து இருந்தார்.
சீரியலில் விலகிய ரோஷினி ஹரிப்ரியன்:
சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். திடீரென சீரியல் இருந்து ரோஷினி வெளியேறியது குறித்து ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்தது. பின் கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் சென்னை கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார். பின் வினுஷா தேவி ஒரு புரோபஷனல் மாடல். அதிலும் இவரின் திமிரு பட டிக் டாக் வீடியோக்கள் மூலம் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.
வினுஷா தேவியின் திரை பயணம்:
இதனால் இன்ஸ்டாகிராமில் இவரை லட்சக்கணக்கான பேர் பாலோ செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவர் டிக் டாக் வீடியோக்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமானவர். பின் இவர் விஜய் டிவி பிரபலமான மைக்கேல் நடித்த ‘N4’ என்ற படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்து இருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். தற்போது இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருகிறார். மேலும், வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருக்கிறார்.
சீரியலில் விலகிய நடிகர்கள்:
அதுமட்டுமில்லாமல் சீரியலில் இருந்து அகிலனை தொடர்ந்து தற்போது அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணியும் விலகி இருக்கிறார். அவருக்கு பதில் வேறு ஒருவர் நடித்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் சீரியலின் டிஆர்பி ரேட்டிங் மக்கள் மத்தியில் குறையவே இல்லை. இப்படி பல திருப்பங்களுடன் இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது வினுஷா தேவி குறித்து ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், வினுஷா தேவி சீரியல் நடிப்பதை தாண்டி ஐடி துறையில் இரவு நேரங்களில் பணிபுரிந்து வருகிறார்.
இரவு நேரத்தில் வினுஷா செய்யும் வேலை:
அதுமட்டுமில்லாமல் பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் கூட இரவு நேரம் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார். இப்படி இரவும் பகலும் என்று பாராமல் வினுஷா பிஸியாக வேலை செய்து கொண்டு இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பாராட்டி உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வினுஷா தேவி பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், நான் கருப்பாக உயரமாக இருப்பதற்கு நிறைய பேர் கிண்டல் செய்தார்கள். சீரியலில் நடிக்க வந்த போது கூட பல கிண்டலுக்கு ஆளான என்னை கண்ணம்மா வேடத்தில் ஏற்றுக்கொண்டது ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்று கூறியிருந்தார்.