நான் மோசமான நிலையில் இருந்தும் அஜித் இப்படி பண்ணிவிட்டார் என்று பாவா லட்சுமணன் வேதனையில் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக வலம் வந்தவர் பாவா லட்சுமணன். இவர் பெரும்பாலும் வடிவேலு காம்பினேஷனில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பின் சில ஆண்டுகளாகவே இவர் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை. சமீப காலமாக இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதோடு பொருளாதார நெருக்கடியினாலும் பாவா லக்ஷ்மண் தவித்து வாடிக் கொண்டு இருக்கிறார். பின் இவர் நீரிழிவு நோய்க்காக சிகிச்சை பெற்று இருந்தார். மேலும், சுகர் கண்ட்ரோல் மீறிப் போனதால் இவரின் கட்டைவிரலை எடுத்து விட்டார்கள். தற்போது பாவா லட்சுமணன் உடல்நலம் தேறியிருக்கிறார்.
பாவா லட்சுமணன் நிலைமை:
மேலும், இவரின் சிகிச்சைக்கு பல பிரபலங்கள் உதவி செய்து இருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக பாவா லட்சுமணன் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, சிகிச்சைக்கு பிறகு இப்போது நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு சர்க்கரையின் அளவு குறைந்து இருக்கிறது. வயிறு வற்றி இருக்கிறது. உடல் ரீதியாக இரண்டு மாதத்திற்கு முன்பு நான் இருந்ததை விட, இப்போது என்னுடைய உடலின் நிலைமை மாறி இருக்கிறது. நான் என்னுடைய மருத்துவமனை சிகிச்சைக்காக யாரிடமும் எந்த உதவி கேட்கவில்லை. ஆனால், தேடி வந்து பலர் எனக்கு உதவி செய்து இருந்தார்கள்.
பாவா லட்சுமணனுக்கு உதவி செய்தவர்கள்:
அதிலும் கலக்கப்போவது யார் பாலாவிடம் எனக்கு பெரிதாக பழக்கம் இல்லை. அவர் தேடி வந்து என்னிடம் முப்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்திருந்தார். அவரை அடுத்து லொள்ளு சபா பழனியப்பன் பணம் கொடுத்தார். சமுத்திரகனி அவர்கள் ஹைதராபாத்தில் இருந்து மேனேஜர் மூலம் எனக்கு ஒரு பெரிய தொகையினை கொடுத்தார். பின் எங்க வீட்டு மீனாட்சி சீரியல் தயாரிப்பாளரும் மருத்துவமனைக்கு வந்து என்னை நேரில் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்திருந்தார். அவர் தான் எனக்கு அவ்வளவு பெரிய தொகை கொடுத்த முதல் நபர்.
மேலும், லொள்ளு சபா பழனியப்பன் பேஸ்புக் மூலம் எனக்காக உதவி செய்யுமாறு பலரிடம் கேட்டிருந்தார். இதனை பார்த்த பலரும் எனக்கு உதவி செய்திருந்தார்கள். இன்றும் உதவி கொண்டு தான் இருக்கிறார்கள்.
அதோடு எனக்கு கால் விரல் போனது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்தது. ஆனால் உண்மையில் பெங்களூரில் வேட்பாளர் ரமேஷ் என்பவருக்கு பிரச்சாரம் செய்ய சென்று இருந்தேன். அப்போது மழையில் ஜெனரேட்டரில் கால் வைத்துவிட்டேன். மூன்று விரல் போய்விட்டது. செப்டிக்கானதனால் தான் அந்த கால் விரல் எடுக்க வேண்டியது.
அஜித் குறித்து சொன்னது:
பிரச்சினை சரியான பிறகு சந்தனம் சார், யோகி பாபு என எல்லோருமே அழைத்து பேசியிருந்தார்கள். ஆனால் வடிவேலு என்னுடைய உடல்நிலை குறித்து என்னிடம் விசாரித்து கூட பேசவில்லை. அஜித் வீட்டிற்கு இரண்டு முறை போனேன். கேமராவில் என்னுடைய முகத்தை காட்டினேன். மேனேஜரை இரண்டு முறை தொடர்பு கொண்டேன். ஆனால் யாருமே கண்டு கொள்ளவில்லை. அதேபோல் விஜயும் என்னை கண்டுகொள்ளவில்லை. படப்பிடிப்பில் கூட எங்களை போன்றவர்களை பாகுபாடாக தான் வைத்திருப்பார்கள். அஜித் எனக்கு உதவவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கு. ஆனால் அவருக்கு என்னுடைய நிலைமை தெரிந்து இருந்தால் கண்டிப்பாக உதவி செய்து இருப்பார். மாதம் எனக்கு வங்கியில் பணம் வரும் படி செய்திருப்பார் என்று கூறியிருந்தார்.