லோகேஷ், நெல்சன் இயக்கம் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் நடனத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் அறிமுகமானார். பின் இவர் சினிமாவில் பிரபலமான நடன இயக்குனர் மட்டுமில்லாமல் இவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த படம் ருத்ரன். ஆக்ஷன் என்டர்டெயினராக இந்த படம் வெளியாகி இருந்தது. இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து தற்போது ராகவா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சந்திரமுகி 2.
சந்திரமுகி 2 படம்:
இந்த படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி. வாசு தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கி இருக்கிறார்.சந்திரமுகி 2 படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் மூலம் சுபாஷ் சந்திரன் அவர்கள் தயாரித்திருகின்றார் . இந்த படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை போல இந்த படத்திலும் நடிகர் வடிவேலு நடித்திருக்கிறார் . இதில் ராகவா லாரான்ஸ் வேட்டையன் ரோலில் நடித்திருக்கிறார்.
படம் குறித்த தகவல்:
மேலும் இவர்களுடன் படத்தில் கங்கனா ரனாவத், ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் சந்திரமுகி 2 படம் தொடர்பாக ராகவா லாரன்ஸ் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, கொரோனாவிற்கு முன்பை விட தற்போது படங்கள் எல்லாம் வித்தியாசமாக வருகிறது.
ராகவா அளித்த பேட்டி:
அந்த வகையில் நெல்சன், வினோத், லோகேஷ் இயக்கிய படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. கொரோனாவிற்கு பின் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படம் வேற மாதிரி இருந்தது. மக்களும் அதை விரும்பி பார்த்தார்கள். தற்போது அந்த மாதிரியான படங்கள்தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. லோகேஷ், வினோத், நெல்சன் எல்லாம் சூப்பராக பண்ணுகிறார்கள். அவர்கள் கதைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விட திரைக்கதைக்கும், ஆக்சனுக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
மூன்று பேரும் கதைக்கு முக்கியத்துவம் தருவதில்லை – லாரன்ஸ்.
— Blue Sattai Maran (@tamiltalkies) September 22, 2023
ஒரே ஒரு பேய் காமடி கான்சப்டை வச்சி பல வருசமா உருட்டற நீங்க சொன்னா சரிதான். pic.twitter.com/yaJtrz1Oxx
ராகவா நடிக்கும் படம்:
அதனால் நாமும் மாறத்தான் வேண்டும். அப்படித்தான் ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்திருக்கிறேன். அந்த படம் தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. அதனை தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகி இருக்கிறேன் கண்டிப்பாக மக்களுக்கு பிடிக்கும் என்று கூறி இருக்கிறார். மேலும், ராகவா நடிப்பில் ‘துர்கா’ படம், துரை செந்தில் குமார் இயக்கும் படம், இயக்குனர் வெற்றி மாறன் படம், லோகேஷ் இயக்கும் படம் என்று பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.