அலறல் சத்தம் கேட்டு அந்த பொண்ண நாங்க தான் ஹாஸ்பிடல்ல சேர்த்தோம் – வடிவேலு குறித்து ஷாக்கிங் விஷயத்தை சொன்ன காமெடி நடிகர்.

0
775
- Advertisement -

பெண் ஒருவரிடம் வடிவேலு தவறாக நடந்து கொண்டார் என்று பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் வைத்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். இவர் டி ராஜேந்தர் படம் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. மேலும், இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். இவர் படத்திலும் நடிகராக மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார் வடிவேலு.

- Advertisement -

வடிவேலு திரைப்பயணம்:

இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு போட்டது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார். கடந்த ஆண்டு தான் இந்த பிரச்சனை தீர்ந்தது. தற்போது வடிவேலு படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்த நிலையில் வடிவேலு மீது பயில்வான் ரங்கநாதன் பாலியல் குற்றசாட்டு வைத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பயில்வான் ரங்கநாதன் வீடியோ:

அதாவது, இளைஞர்கள் வர வர முதியவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போவது தான் சினிமாவில் வாய்ப்பு குறைந்து போனது. அவர் பத்திரிகைக்காரர், நிறைய பேசுவார் அவர் இருந்தால் நாம பேச முடியாது என்று சொன்னவர் வடிவேலு. பின் நான் ஒரு இரண்டு படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிய பின்பும் கூட இயக்குனர் போன் பண்ணி உங்களுக்கும் வடிவேலுக்கும் என்ன பிரச்சனை? என்று கேட்டார். நான் அடுத்த சில நாட்களில் நடந்த பிரஸ்மீட்டில் வடிவேலுவிடம் நேரடியாகவே படத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டது பற்றி கேட்டேன்.

-விளம்பரம்-

வடிவேலு குறித்து சொன்னது:

அதற்கு அவர், நீங்க அனுபவம் உள்ள ஆள். நான் நிக்கணும்னே. நீங்க இருந்தா எப்படி? என்று கேட்டவரிடம் நான் சொல்ல முடியும்? என்று சொன்னார். அதேபோல் வடிவேலுவுடன் நான் நடித்த படங்களில் வாய்ப்பு எல்லாம் அவர் வாங்கிக் கொடுத்ததில்லை. வடிவேலு நேரடியாக நம்மிடம் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பார். ஆனால், இயக்குனர்களிடம் போய் கேட்பார். அதனால்தான் எல்லா துணை நடிகர்களும் வடிவேல் மீது குற்றச்சாட்டு வைக்கிறார்கள். அவருடைய திறமையை நான் என்றும் மதிக்கிறேன். அப்படிப்பட்ட வடிவேலும் பல அறைகளில் உல்லாசமாக இருந்திருக்கிறார். அதற்கு நானே சாட்சி.

பாலியல் வன்கொடுமை:

பாண்டிச்சேரியில் நடைபெற்ற சூட்டிங் போது நள்ளிரவில் ஒரு அறையில் பெண் ஒருவர் ஓ…வென கத்தி கதறினார். நானும் ப்ரொடக்ஷன் மேனரும் அந்த பெண்ணை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்தோம். அவர் ஏதோ அந்த பெண்ணை பண்ணிவிட்டார். அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பார் என நினைக்கிறேன். அதனால் தான் அவர் அப்படி கத்தி இருப்பார் என்று கூறி இருந்தார். இப்படி வடிவேலு குறித்து பயில்வான் நங்கநாதன் வைத்திருக்கும் குற்றச்சாட்டு தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு வடிவேலு தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement