உங்களுக்கு சினிமா பொழுதுபோக்கு, எனக்கு அது தொழில் – நடிகர் அஜித் வருத்தமான அறிக்கை.

0
925
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள்..இப்படி ஒரு நிலையில் வலிமை படத்தின் அப்டேட் தாமதவாமதால் கடுப்பான அஜித் ரசிகர்கள் மதுரையில் வலிமை அப்டேட் காணவில்லை என்று போஸ்டர் கூட அடித்தனர்.

-விளம்பரம்-

நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர். அஜித் ரசிகர்கள் பலரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி பிரச்சாரத்திற்கு சென்ற போது வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்டு இருந்தனர். அதே போல சமீபத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டு இருந்த இங்கிலாந்து வீரர் மொயின் அலியை அழைத்து அவரிடம் வலிமை அப்டேட்டை கேட்டு இருந்தனர் அஜித் ரசிகர்கள்.அவ்வளவு ஏன்பல்வேறு திட்டங்களை துவங்கி வைப்பதற்காக நேற்று (பிப்ரவரி 14) தமிழ் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியிடமே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்டை கேட்டுள்ளனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க : ஆக்ஷன் இயக்குனர் ஹரியின் மூன்று பசங்களா இது – என்ன இப்படி வளந்துட்டாங்க.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் மீதும் என் படங்களின் மீதும் அபரிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் “வலிமை” சம்பந்தப்பட்ட updates கேட்டு அரசு, அரசியல் விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன்.

அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும். இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன். என்று வருத்தத்துடன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement