‘காதலும் பிரேக்கப்பும்’ – எப்படி இருக்கிறது புது மாப்பிள்ளை அசோக் செல்வனின் சபா நாயகன்.

0
558
- Advertisement -

அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் சபாநாயகன். இந்த படத்தில் அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மேகா ஆகாஷ், அக்‌ஷயா ஹரிஹரன், மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, விவியா சனத், ராம் குமார் உள்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து இருக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

பள்ளி, கல்லூரி கால காதல் கதையை மையமாக வைத்து தான் இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். படத்தில் அசோக் செல்வன் ஒரு நாள் இரவு குடித்துவிட்டு போதையில் இருக்கிறார். இதனால் போலீஸ் அவரை கைது செய்து அழைத்து செல்கிறது. அப்போது செல்லும் வழியில் தன்னுடைய காதல் தோல்விகளை போலீசாரிடம் அசோக் செல்வன் சொல்கிறார்.

- Advertisement -

அதில், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது கார்த்திகா மீது உண்டாகும் காதல், கல்லூரி படிக்கும் போது சாந்தினி மீது ஏற்படும் காதல், எம்பிஏ படிக்கும் போது மேககா ஆகாஷ் மீது ஏற்படும் காதல் என வரிசையாக தன்னுடைய காதல் களைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். இறுதியில் அசோக் செல்வன் தன்னுடைய காதலில் வெற்றி பெற்றாரா? எந்த காதல் கை கோர்த்தது? என்பதே படத்தின் மீதி கதை.

சமீப காலமாகவே அசோக் செல்வன் வித்யாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படத்தில் அசோக் செல்வனின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இந்த படத்தில் சபாநாயகன் அரவிந்த் கதாபாத்திரத்தில் அசோக்செல்வன் நடித்திருக்கிறார். ஒரு காதலுக்காக ஏங்கும் நபருடைய வாழ்க்கையை இந்த படத்தில் காண்பித்து இருக்கிறார் இயக்குனர். எல்லாம் கூடி வரும் போது பிரேக் அப், பிரச்சனைகளால் காதல் தோல்வி அடைகிறது என்பதை சிறப்பாக காண்பித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவரை அடுத்த படத்தில் வரும் கார்த்திகா, சாந்தினி, மேகா ஆகியோரும் தனக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனால், இவர்களுடைய கதாபாத்திரம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. இவர்களுடைய கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கொடுத்திருக்கலாம். இவர்களை அடுத்து மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, அக்ஷயா, ராம்குமார் ஆகியோர் தங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

படம் முழுவதையும் அசோக் செல்வன் சுமந்து செல்கிறார். ஆனால், படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். பள்ளி காட்சிகள் தான் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும், படம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இன்று இளைஞர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். குறிப்பாக, 90ஸ் கிட்ஸ் மத்தியில் இந்த படம் வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது. படத்தை இயக்குனர் உணர்ச்சிபூர்வமாகவும், காமெடி கலந்தும் கொடுத்திருக்கிறார். பாடல்கள் பெரிதாக இல்லை என்றாலும் பின்னணி இசை நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவும், எடிட்டிங் நன்றாக இருக்கிறது. லாஜிக் எல்லாம் பார்க்காமல் படத்தை பார்த்தால் ஒரு சுமாரான காதல் கதை படமாக இருக்கிறது.

நிறை:

அசோக் செல்வனின் நடிப்பு சிறப்பு

காதல் கதை

பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

காதல், எமோஷன், காமெடி நன்றாக இருக்கிறது.

குறை:

லாஜிக் குறைபாடுகள்

படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்

பாடல்கள் ஒர்க் அவுட் ஆகவில்லை

சில கதாபாத்திரங்கள் தேவையே இல்லை

மொத்தத்தில் சபாநாயகன்- ஜாலி காதல் கதை

Advertisement