தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகர்களில் ஒருவராக அர்ஜுன் திகழ்கிறார். இவர் 90’ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். அதோடு 90ஸ் முதல் 2K கிட்ஸ் என அணைத்து ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் இவர் ஆக்ஷன் படங்களில் தான் நடித்து வருகிறார். இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இப்படிபட்ட அந்தஸ்தில் உள்ள நடிகர் அர்ஜுன் மீது “நிபுணன்” படத்தில் இணைந்து நடித்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் அளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனது முகநூல் பக்கத்தில், நடிகர் அர்ஜுன் உடன் தமிழில் நடித்தபோது நானும் அவரும் நெருங்கி நடிக்க வேண்டிய காட்சி ஒன்று இருந்தது. அந்தக் காட்சியை படமாக்குவதற்கு முன்பாக படப்பிடிப்புத் தளத்தில் அனைவரது முன்னிலையிலும் அர்ஜுன் எனது அனுமதியின்றி என்னிடம் நெருக்கமாக வந்து என்னைத் தொட்டார். அது எனக்கு கோபத்தை உண்டாக்கியது என்று பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து நடிகர் அர்ஜுனும், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது போலீசில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
பாலியல் வழக்கில் தப்பிய அர்ஜுன்:
பின் நடிகர் அர்ஜுனின் சார்பாக அவரது உறவினரும் கன்னட நடிகருமான மறைந்த துருவா சார்ஜா பெங்களூர் சிவில் நிதிமன்றத்தில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது ரூ.5 கோடி மான நஷ்ட ஈடு வழக்கு தொடந்தார். இந்த வழக்கு கர்நாடக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆண்டுகள் நடந்தது. பிறகு நீதிமன்றத்தில் எந்தவிதமான சாட்சிகளும் இல்லையென்று போலீசார் ஆவணங்களை தாக்கல் செய்தனர். அதை ஏற்ற நீதிபதி போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் அர்ஜூனை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக உத்தரவிட்டார். இது சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.
பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி:
இந்நிலையில் அர்ஜுன் குறித்தும், ஸ்ருதி குறித்தும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, அர்ஜுன் பொதுவாகவே பாடி டிமாண்ட் இருக்கிற நபர். அவருக்கு மது பழக்கம் உண்டு. ஆனாலும், கண்ட்ரோலாக குடிப்பார். உளரமாட்டார். அதை விட அதிகமாக உடற்பயிற்சி செய்வார். அதனால் தான் மது பழக்கத்தினால் அவருடைய உடல் பாதிக்கவில்லை. அர்ஜுன் தன்னுடன் நடித்த நடிகர்களோடு நெருங்கி பழகுவது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் நெருங்கி பழகுவது என்பது அந்த நடிகைகளின் விருப்பத்தினால் தானே தவிர என்றும் அர்ஜுன் அவர்களை கட்டாயப்படுத்தியது கிடையாது. நடிகைகள் விருப்பத்தினால் மட்டும் தான் அவர் நெருங்கி பழகுவார்.
அர்ஜுன் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியது:
இதை அவர் மீது குறை சொல்லவே முடியாது. அதேபோல் ரஞ்சிதா சினிமாவில் இருந்து விலக்கியதற்கு காரணம் அர்ஜுன் கொடுத்த தொல்லை தான் என்று சொல்வதெல்லாம் முற்றிலும் பொய். நடிகர் அர்ஜுன் எப்போதும் எந்த பெண்ணையும் வலுக்கட்டாயமாக பாலியல் தொல்லை கொடுத்தது கிடையாது. நித்யானந்தா – ரஞ்சிதாவுக்கு ஏற்கனவே ஒரு தொடர்பு இருந்தது. அது வேறு. அர்ஜுன் மீது இதுவரை எந்த நடிகைகளும் பாலியல் மீது புகார் அளித்தது இல்லை. ஆனால்,ஸ்ருதி தவிர. அவர் இந்த மாதிரி புகார் அளித்ததற்கு சாட்சி இல்லை என்று கோர்ட்டு உத்தரவிட்டது என்று கூறுகிறார். இப்படி பயில்வான் ரங்கநாதன், அர்ஜுன் குறித்து குறித்து பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பயில்வான் ரங்கநாதன் பற்றிய தகவல்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார். இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.